Last Updated:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் பஞ்சாப் பெங்களூர் ஆகிய இரு அணியில் பலம் காண்கிறது. இந்த இரு அணிகளும் கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்ற ஐபிஎல் சீசங்களில் கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் ஐபிஎல் தொடர் மார்ச் 22 அன்று தொடங்கியது. பாதி சீசனுக்கு மேல் நிறைவடைந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றத்தின் காரணமாக ஐபிஎல் தொடர் மே 9ம் தேதி அன்று இடைநிறுத்தப்பட்டு, மே 17 முதல் மீண்டும் ஆறு மைதானங்களில் தொடரப்பட்டது. லீக் சுற்றும் முடிவில் பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
மீதமுள்ள சென்னை, கொல்கத்தா லக்னோ, ராஜஸ்தான், ஹைதராபாத், டெல்லி போன்ற அணிகள் லீக் சுற்றுடன் சென்று விட்டது. பிளே ஆப் போட்டிகளில் விளையாடிய நான்கு அணிகளில் பெங்களூரு, பஞ்சாப் இரு அணிகள் இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. இதில் யார் இந்த வருடம் ஐபிஎல் மகுடத்தை சூடப்போவது என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
பெங்களூரு ரசிகர்களின் கருத்து; ” நான் தீவிர ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர். கடந்த 17 வருடங்களாக எங்களால் கோப்பையை முடியாதது எங்களுக்கு பெரும் மன வருத்தமாக இருந்து வருகிறது. எனவே இதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக இந்த பதினெட்டாவது சீசனில் நாங்கள் அறுவடை செய்ய உள்ளோம். விராட் கோலி நெம்பர் 18 சீசன் 18 என்பதால் இந்த வருடம் கண்டிப்பாக நாங்கள் இறுதி போட்டியில் கோபியை வெல்வோம்.
இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோத உள்ளோம். பஞ்சாப் அணியும் பலமான அணிதான் இருந்தாலும் எங்களுடைய நோக்கம் கோப்பையை வெல்வது தான். கடந்த 17 வருடங்களாக கோப்பைக்காக தவமாய் தவமிருந்து வருகிறோம். இந்த வருடம் ரசிகர்கள் எங்களுக்காக பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் இது நிச்சயம்” என்றனர் பெங்களூர் ரசிகர்கள்.
பஞ்சாப் கிங்ஸ் ரசிகர்களின் கருத்து; ” இந்த வருடம் 18 ஆவது ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இதில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மோத இருக்கிறது. எங்களுக்கு மிகவும் பிடித்த அணி பஞ்சாப் தான். ஸ்ரீசயர் மிகவும் சிறப்பான அணி தலைவராக திகழ்ந்து வருகிறார். நன்மைக்களமாக அவரது டேட்டிங்கில் தனி திறமையை வெளிப்படுத்தி வருகிறார். எங்களது அணிக்கு அது மேலும் பலமாக இருக்கும். பலத்தைப் பொறுத்த வரையிலும் இரு அணிகளும் சம பலத்துடன் தான் உள்ளது. இறுதியாக சண்டையிட்டு கோபியை எந்த அணி வெல்லப்போவது என்று ஆவலாக இருக்கிறோம். பஞ்சாப் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கையோடும் இருக்கிறோம்” என்றனர் பஞ்சாப் ரசிகர்கள்.
இந்த இரு அணிகளும் இதுவரையிலும் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
June 03, 2025 12:19 PM IST

