மாமன்னர்ரும் ராஜா பெர்மைசூரியும் மலேசியர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்
மாமன்னர் யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிம் மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் ராஜா ஸரித் சோபியா ஆகியோர் இன்று தீபத் திருநாளைக் கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை சுல்தான் இப்ராகிமின் முகநூல் பக்கத்தில் அரச தம்பதியினரின் புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட செய்தியில் இந்த வாழ்த்து பகிரப்பட்டது.
அதனுடன் இணைந்த செய்தி: “தீபாவளியின் ஒளி உங்கள் வாழ்க்கையில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் நிரப்பட்டும். உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் வாழ்வு மேலும் பிரகாசமாக அமைய தீபாவளி வாழ்த்துக்கள்.”
பகாங் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா மற்றும் தெங்கு அம்புவான் பகாங் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோரும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
பகாங் அரச குடும்பம், மாநிலம் மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் தங்களது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் “கெசுல்தானன் பகாங்” என்ற பெயரில் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
“குடும்பங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களிடையே மகிழ்ச்சி, அன்பு மற்றும் நல்லிணக்கம் நிறைந்த சூழ்நிலையில் தீபத் திருநாள் கொண்டாடப்படும்” என்று அரச தம்பதியினர் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
“இந்த மங்களகரமான கொண்டாட்டம், குறிப்பாக பகாங் டாருல் மக்மூரில், பொதுவாக மலேசியா முழுவதும் பல்வேறு இன மக்களிடையே அமைதி, செழிப்பு மற்றும் ஒற்றுமை உணர்வைத் தொடர்ந்து கொண்டு வரட்டும்” என்று பதிவில் கூறப்பட்டுள்ளது.
“தீபாவளி வாழ்த்துக்கள்.”