மாநிலங்களுக்கு ஜூன் மாதத்தில் வரி பகிர்வில் கூடுதல் தவணை தொகை விடுவிக்கப்படுமென நிதி அமைச்சகம் இன்று(ஜூன் 10) அறிவித்துள்ளது.
மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்காகவும், மூலதனச் செலவுகளுக்காகவும் கூடுதல் தவணை விடுவிக்கப்பட உள்ளது. இதன்மூலம், ஜூன் மாதத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொகை ரூ. 1,39,750 கோடியாக அதிகரிக்கும்.
இதன்மூலம், 2024 – 25 நிதியாண்டில் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள மொத்த தொகை(ஜூன் 10-ஆம் தேதி வரை) ரூ. 2,79,500 கோடியாக அதிகரித்துள்ளது.
2024 – 25 நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு விடுவிக்கப்பட்டுள்ள மொத்த தொகை(ஜூன் 10-ஆம் தேதி வரை) ரூ. 5,700.44 கோடியாக அதிகரித்துள்ளது.

&w=1200&resize=1200,675&ssl=1)