• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மாநாட்டுக்குப் பின் புதினுடன் ஒரே காரில் சென்ற பிரதமர் மோடி

GenevaTimes by GenevaTimes
September 1, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மாநாட்டுக்குப் பின் புதினுடன் ஒரே காரில் சென்ற பிரதமர் மோடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாநாட்டுக்குப் பின்னர் ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரே காரில் சென்ற நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு சீனாவின் தியாஞின் நகரில் நடந்தது. இந்த மாநாட்டைத் தொடர்ந்து ரஷ்யா – இந்தியா இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.


இந்நிலையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்துக்கு இருவரும் ஒன்றாக காரில் சென்றனர். அது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த மோடி, “இந்திய – ரஷ்ய இருதரப்பு ஆலோசனைக்காக நானும், புதினும் ஒரே காரில் பயணிக்கிறோம். அவருடனான ஆலோசனைகள் எப்போதுமே ஆழமான புரிதலைக் கொண்டவை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.


அண்மையில், அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்தது. அதற்கு ரஷ்யாவுடனான நட்பை, அங்கிருந்து இந்தியா அதிகளவு கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக் காட்டியது. இந்நிலையில், ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


‘ஹாங்கி எல்-5’ சொகுசு கார்: ஏற்கெனவே, சீன அதிபர் ஜி ஜின்பிங், ‘ஹாங்கி எல்-5’ என்ற அதிநவீன சொகுசு காரை பயன்படுத்தி வருகிறார். இதில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.


இந்த நிலையில், ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா வந்துள்ள பிரதமர் மோடியின் பயணத்துக்கு சீன அதிபர் பயன்படுத்தும் ‘ஹாங்கி எல்-5’ கார் வழங்கப்பட்டுள்ளது.


ரஷ்ய அதிபர் புதின் உட்பட 20-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள், மாநாட்டில் பங்கேற்றுள்ள நிலையில், மோடியின் பயணத்துக்கு மட்டுமே சீன அதிபரின் கார் வழங்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.



Read More

Previous Post

முதன்முறையாக உலகின் பரபரப்பான துறைமுகங்களில் 10வது இடத்தைப் பிடித்துள்ளது கிள்ளான் துறைமுகம் – Malaysiakini

Next Post

“வாக்கு திருட்டு… பாஜகவுக்கு எதிராக ஹைட்ரஜன் குண்டு வருகிறது!” – பிஹார் பேரணியில் ராகுல் காந்தி தகவல் | ‘Hydrogen bomb’ of revelations on ‘vote chori’ coming, Modi will not be able to show his face, says Rahul Gandhi

Next Post
“வாக்கு திருட்டு… பாஜகவுக்கு எதிராக ஹைட்ரஜன் குண்டு வருகிறது!” – பிஹார் பேரணியில் ராகுல் காந்தி தகவல் | ‘Hydrogen bomb’ of revelations on ‘vote chori’ coming, Modi will not be able to show his face, says Rahul Gandhi

“வாக்கு திருட்டு... பாஜகவுக்கு எதிராக ஹைட்ரஜன் குண்டு வருகிறது!” - பிஹார் பேரணியில் ராகுல் காந்தி தகவல் | ‘Hydrogen bomb’ of revelations on ‘vote chori’ coming, Modi will not be able to show his face, says Rahul Gandhi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin