எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் (EPF) மற்றும் நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (NPS) ஆகிய இரண்டும் உறுதியளிக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் சந்தையோடு தொடர்புடைய ஏற்ற இறக்கங்களை கொண்ட முதலீட்டுத் திட்டங்கள். 30 வயதில் ஒருவர் ஒவ்வொரு மாதமும் 75,000 ரூபாய் வருமானம் பெறுகிறார் என்றால், அவர் தலா 12,500 ரூபாயை EPF மற்றும் NPS திட்டங்களில் முதலீடு செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் 8% வருமான அதிகரிப்பை கருத்தில் கொண்டு முதலீட்டுத் தொகையையும் அதிகரிக்கலாம். அப்படி 60 வயது வரும்போது EPF நிதியானது 4.74 கோடி ரூபாய் ஆகவும், NPS அக்கவுண்டில் 7.42 கோடி ரூபாய் என மொத்தமாக 12.16 கோடி ரூபாய் கிடைக்கும்.