Last Updated:
இவரது அனைத்துப் பயணங்களின்போதும் உயர்நிலை ஹோட்டல் அறைகள் (High-end Hotel Suites) பொதுவாக ஏற்பாடு செய்யப்படும்.
பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுள்ள மிதுன் மன்ஹாசுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். உலகின் முன்னணி விளையாட்டு நிர்வாகங்களில் ஒன்றாக பிசிசிஐ செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக ரோஜர் பின்னி செயல்பட்டு வந்த நிலையில் அவருக்கு வயது 70 யை கடந்ததால் அவர் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார்.
அவருக்கு பதிலாக புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாகவும் இவர் செயல்பட்டிருக்கிறார்.
BCCI தலைவர் பதவி ஒரு கௌரவப் பதவி (Honorary Position) என்பதால், மிதுன் மன்ஹாஸுக்கு நிலையான ஆண்டு அல்லது மாதாந்திர சம்பளம் எதுவும் வழங்கப்படாது. இருப்பினும், அனைத்து உத்தியோகபூர்வ செலவுகளையும் ஈடுசெய்யும் வகையில் அவருக்குப் போதுமான தினசரி படிகள் (Daily Allowances) மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்தச் சலுகைகள் BCCI-இன் செயலாளர் மற்றும் பொருளாளர் போன்ற பிற உயர் பதவிதாரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்குச் சமமானவை.
உள்ளூரில் நடைபெறும் மீட்டிங்குகளில் பங்கேற்கும்போது பிசிசிஐ தலைவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 40 ஆயிரமும், வெளிநாடுகளில் கூட்டம் நடைபெறும்போது நாள் ஒன்றுக்கு ரூ. 89 ஆயிரம் வரையிலும் வழங்கப்படும்.
பணி தொடர்பாக பயணம் செல்லும்போதும் இந்தியாவுக்குள் ரூ. 30 ஆயிரம் வழங்கப்படும். உள்நாட்டுப் பயணம் செல்லும்போது விமானத்தில் வணிக வகுப்பு (Business-class) வழங்கப்படும். சர்வதேசப் பயணத்தின்போது முதல் வகுப்பு (First-class) அல்லது வணிக வகுப்பு (Business-class) வழங்கப்படுகிறது.
September 28, 2025 7:58 PM IST


