வேலை தேடி கிடைக்காததால் வீட்டில் இருந்தபடியே கழிவு பொருட்களை விற்பனை செய்யும் தொழில் துவங்கி தற்போது 1000 கோடி ரூபாய் நிறுவனத்தை உருவாக்கியுள்ள பூனம் குப்தாவின் வெற்றி பயணம்… அனைத்து இந்திய இளைஞர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகவும், ஊக்கமாகவும் அமையக்கூடிய பூனம் குப்தா என்பவரை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். இவர் ஒரு காகித மறுசுழற்சி தொழில் ஒன்றை உருவாக்கி அதனை 800 கோடி ரூபாய் நிறுவனமாக தற்போது மாற்றியுள்ளார் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம், உண்மைதான். இவருடைய இந்த பயணம் எப்படி இருந்தது என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த வெளிநாட்டு வாழ் இந்திய தொழிலதிபர் டெல்லியில் பிறந்து, லேடி இர்வின் பள்ளி மற்றும் டெல்லி பப்ளிக் ஸ்கூலில் தனது படிப்பை முடித்துள்ளார். அதன் பிறகு டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை பெற்றுள்ளார். டெல்லியில் உள்ள ஃபோர்ஸ் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் மற்றும் ஹோலாந்தில் உள்ள மாஸ்ட்ரிக்ட் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் சர்வதேச வணிகம் மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் MBA பட்டம் வென்றுள்ளார்.
பின்னர் 2002 ஆம் ஆண்டு குப்தாவுக்கு திருமணம் நடந்ததால், அவர் தனது கணவர் புனி குப்தாவுடன் ஸ்காட்லாந்துக்கு இடம் பெயர்ந்தார். ஸ்காட்லாந்தில் தனக்கு வேலை எதுவும் கிடைக்காத காரணத்தினால் சொந்தமாக ஒரு தொழில் துவங்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டார். ஆகவே ஸ்காட்லாந்தில் உள்ள கில்மாக்கோம் என்ற பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில் இருந்தபடி PG பேப்பர் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனத்தை பூனம் 2003 ஆம் ஆண்டு ஆரம்பித்துள்ளார். ஸ்காட்லாந்து அரசு மூலமாக பெற்ற 1 லட்ச ரூபாயை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து சொந்த தொழிலை துவங்கினார் பூனம்.
இதையும் படிங்க:
Flipkartm முன்னாள் ஊழியர் தொடங்கிய நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ.8,300 கோடி; யார் இவர்?
நிறுவனத்தை உருவாக்கிய 6 மாதங்களுக்கு பிறகு 1.5 கோடி ரூபாய் பேக்கேஜ் சம்பளத்துடன் தனது கணவரும் இந்த நிறுவனத்தில் சேர்ந்தார். ஆரம்பத்தில் தூக்கி எறியப்பட்ட பொருட்களை மறு உபயோகம் செய்வதில் இவரது தொழில் கவனம் செலுத்தி வந்தது. ஆனால் தற்போது PG பேப்பர் உலகம் முழுவதும் உள்ள 53 நாடுகளில் இருந்து ப்ராடக்டுகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிறுவனம் தற்போது UK-வில் உள்ள அதிவேகமாக வளர்ந்து வரும் மற்றும் மிகப்பெரிய காகித நிறுவனங்களில் ஒன்றாக அமைகிறது.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தன்னுடைய கடுமையான உழைப்பு மற்றும் விடா முயற்சி மூலமாக பூனம் குப்தா தனது நிறுவனத்தை 1000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி உள்ளார். இவருடைய நிறுவனத்தில் தற்போது 350 -க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர். மேலும் 7 நாடுகளில் இவருக்கு சொந்தமாக 9 நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
