மாத்தளை, பலபத்வல, எல்லேபொல மலைத் தொடரில் சற்று முன்னர் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன்படி, குறித்த மண்சரிவில் சிக்கி ஐவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சீரற்ற வானிலை
இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக தொடர் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆகவே, மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும், மண்சரிவு அபாயங்கள் உள்ள பிரதேசங்களிலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

