தபால் அலுவலக டெபாசிட்டரி சேவையானது, முதலீட்டில் நிலையான வருமானத்தை வழங்கும் பரந்த அளவிலான திட்டங்களை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக அரசாங்க உத்தரவாதத்துடன் கூடிய நிரந்தர வைப்புத் தொகையில் மாதாந்திர வருமானத்தைப் பெறும் திட்டங்களில் அச்சமின்றி முதலீடு செய்யலாம்.
அந்த வகையில் போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் மிகவும் பாதுகாப்பான திட்டங்களில் ஒன்றாகும். நிதிக்கான பாதுகாப்புடன் உத்தரவாதமான வருமானம் கொடுக்கும் மாதாந்திர வருமானத்தை பொறுத்த வரையில், தபால் அலுவலகம் மாதாந்திர சேமிப்புத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது.
தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டம் (MIS) என்றால் என்ன?
7.4 சதவீத வட்டி விகிதத்தை வழங்கும் தபால் அலுவலகத்தின் அதிக வருவாய் ஈட்டும் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த திட்டத்தின் மூலம், முதலீட்டாளர்கள் மாதந்தோறும் பணத்தை எடுக்கலாம். மற்ற அஞ்சல் அலுவலக திட்டங்களைப் போலவே இந்த திட்டமும் நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு சரிபார்க்கப்படுகிறது.
முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு:
தபால் அலுவலக MIS முதலீட்டுத் திட்டத்தில், ஒரு கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சமும், இரண்டு அல்லது மூன்று நபர்களுடன் கூட்டாக தொடங்கப்படும் கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சமும் முதலீடு செய்யலாம்.
லாக்-இன் காலம்:
நீங்கள் ஒரு தபால் அலுவலகத்தில் மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) கணக்கைத் தொடங்கினால், குறைந்தது 5 ஆண்டுகள் முடியாமல் அந்தக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை உங்களால் எடுக்க முடியாது. அதாவது உங்களின் அசல் தொகையை 5 வருட முதிர்வு காலத்திற்கு பிறகு திரும்ப பெறலாம். அதே நேரத்தில், இது மேலும் 5 – 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து அதன் மூலம் மாத வருமானம் பெறலாம்.
அவசர காலத்தில் பணத்தை எடுக்கலாம்:
ஒரு முதலீட்டாளர் எந்த சூழ்நிலையிலும் இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு முன் பணத்தை எடுக்க முடியாது. இருப்பினும், ஒரு வருடத்திற்குப் பிறகு, சில அவசரகால தேவைக்காக நீங்கள் இந்த திட்டத்தை மூட விரும்பினால், அதற்காக நீங்கள் அபராதம் செலுத்த வேண்டும்.
இதையும் படிக்க: உங்கள் மனைவிக்கு மாதம் ரூ.45,000 கிடைக்க வேண்டுமா? இப்போதே வங்கியில் இந்த அக்கவுன்டை ஓபன் பண்ணுங்க
முதிர்வுக்கு முன் அக்கவுண்ட்டை மூடுவதற்கு எவ்வளவு அபராதம்?
தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் முதிர்வுக்கு முன் பணம் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ஒரு வருடத்திற்குப் பிறகு இந்த வசதியைப் பெறுவீர்கள். ஆனால் அதற்கு முன் பணத்தை எடுப்பது சாத்தியமில்லை. இருப்பினும், முதிர்வுக்கு முன்பாக கணக்கு மூடப்பட்டால், நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். 1 முதல் 3 ஆண்டுகளுக்குள் நீங்கள் பணத்தை எடுத்தால், டெபாசிட் தொகையில் 2% கழிக்கப்பட்டு திருப்பி அளிக்கப்படும். அதே நேரத்தில், 5 ஆண்டுகள் முடிந்தபிறகு, பணத்தை எடுக்க விரும்பினால், நீங்கள் முழுத் தொகையையும் திரும்பப் பெறுவீர்கள்.
ஒவ்வொரு 5 வருடங்களுக்கு பிறகும் உங்கள் தேவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப, அசல் தொகையை திரும்பப் பெறலாம் அல்லது திட்டத்தை நீட்டிக்கலாம். கணக்கில் பெறப்பட்ட வட்டி ஒவ்வொரு மாதமும் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும். தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்யும்போது TDS கழிக்கப்படுவதில்லை. இருப்பினும், உங்கள் கைக்கு வரும் வட்டிக்கு வரி விதிக்கப்படும்.
5 லட்சம், 9 லட்சம் மற்றும் 15 லட்சம் டெபாசிட்களின் வருமானம் என்ன?
தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டம் கால்குலேட்டரின் படி, நீங்கள் ரூ.5 லட்சத்தை தபால் அலுவலக எம்ஐஎஸ்ஸில் டெபாசிட் செய்தால், 7.4 சதவீத வட்டி விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.3,083 சம்பாதிப்பீர்கள். அதேசமயம் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.5,550 சம்பாதிக்கலாம். கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால், இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 சம்பாதிக்கலாம்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)