ஒரு லட்சம் ரூபாய் என்பது ஒரு சிலருக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார மைல்கற்களாக இருக்கலாம். குறிப்பாக, சமீபத்தில் சம்பாதிக்கத் தொடங்கியவர்கள், மாணவர்கள், இல்லத்தரசிகள் போன்றவர்களுக்கு இது ஒரு பெரிய தொகை. ஆனால், அனைவருடைய மனதிலும் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான கேள்வி, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து இந்த இலக்கை அடைவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதுதான். ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் முதலீடு செய்து, வெறும் 18 மாதங்களில் உங்களால் லட்சாதிபதி ஆக முடியும். அதற்கான கணக்கீட்டை விளக்கமாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.


