• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மாதம் ரூ.2,000 சேமித்தால் ஓய்வூதிய காலத்தில் ரூ.1 கோடி! எப்படி தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
August 16, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
மாதம் ரூ.2,000 சேமித்தால் ஓய்வூதிய காலத்தில் ரூ.1 கோடி! எப்படி தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இன்று கோடீஸ்வரராக வேண்டும் என்றால் நாம் நினைப்பது போல் அவ்வளவு எளிதா? என நினைக்கலாம். ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவைக் கருத்தில் கொண்டு பார்த்தால், அது இன்றியமையாததாக இருக்கலாம்.

இதைக் கருத்தில் கொண்டு, உங்கள் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க, ஓய்வூதியத் திட்டத்தை முன்கூட்டியே தொடங்குவது முக்கியம் ஆகும். நீங்கள் ஓய்வுபெறும் நேரத்தில், குறைந்தப்பட்சம் ஒரு கோடியாவது ஒதுக்கி வைத்திருக்க வேண்டும். இது ஆடம்பரம் என்று நினைக்காமல் அவசியமானதாக நீங்கள் கருத வேண்டும்.

விளம்பரம்

மியூச்சுவல் ஃபண்டு எஸ்ஐபி (முறைசார் முதலீட்டு திட்டம்)

ஓய்வூதிய காலத்திற்கென்று ஒரு குறிப்பிடத்தக்க தொகையை உருவாக்குவதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி ஆகும். இத்திட்டம் பங்குச்சந்தை சார்ந்து செயல்பட்டாலும், மற்ற முதலீட்டு ஆப்ஷன்களோடு ஒப்பிடும் போது சிறந்த நீண்ட கால வருவாயை வழங்குகின்றன. சொல்லப்போனால் இது மற்ற முதலீட்டு திட்டங்களை விட அதிக ரிட்டர்ன் தருகிறது.

ஓய்வூதிய திட்டமிடல்

உங்கள் கேரியரின் தொடக்கத்திலேயே, அதாவது ஒரு 25 வயதிலேயே நீங்கள் ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கினால், சேமிக்க உங்களுக்கு போதுமான நேரம் இருக்கிறது. இருப்பினும், உங்களுக்கு ஏற்கனவே 35 வயதாக இருந்தால், உங்களுக்கு 60 வயதாகும் வரை சேமிக்க இன்னும் 25 ஆண்டுகள் மட்டுமே உள்ளது. எனவே, நீங்கள் 25, 30 அல்லது 35 வயதுடையவரா என்பதைப் பொறுத்து, மில்லியனர் ஆக எஸ்ஐபி திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

விளம்பரம்

ஓய்வூதிய திட்டமிடல்: நீங்கள் 35 வயதுடையவராக இருந்தால்

ஓய்வுபெற இன்னும் 25 வருடங்களே உள்ள நிலையில், மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000 எஸ்ஐபி-யில் முதலீடு செய்ய வேண்டும். இந்த 25 ஆண்டுகளில், நீங்கள் மொத்தமாக ரூ.18,00,000 முதலீடு செய்வீர்கள். இதற்கு சராசரியாக 12 சதவீத ரிட்டர்ன் கிடைத்தால், நீங்கள் ரூ.95,85,811 வட்டியாக பெறுவீர்கள். அதன்படி 60 வயதிற்குள், உங்கள் மொத்த கார்பஸ் தொகை ரூ.1,13,85,811 ஆக இருக்கும்.

ஓய்வூதிய திட்டமிடல்: நீங்கள் 30 வயதுடையவராக இருந்தால்

விளம்பரம்

நீங்கள் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 30 ஆண்டுகள் இருந்தால், நீங்கள் மாதத்திற்கு ரூ.3,000 எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்யலாம். அடுத்த 30 ஆண்டுகளில், உங்கள் மொத்த முதலீடு ரூ.10,80,000 ஆக இருக்கும். இதற்கு 12 சதவீத ரிட்டர்னாக, நீங்கள் 60 வயதிற்குள் ரூ.95,09,741 வட்டியாக பெற்று, மொத்த கார்பஸ் தொகை ரூ.1,05,89,741ஆக இருக்கும்.

ஓய்வூதிய திட்டமிடல்: நீங்கள் 25 வயதுடையவராக இருந்தால்

நீங்கள் 35 வருடங்கள் சேமிக்கும் போது, ​​மாதத்திற்கு வெறும் 2,000 ரூபாய் எஸ்ஐபி மூலம் செலுத்தினாலே போதும். இதுவே உங்களை கோடீஸ்வரராக்கும். அதன்படி 35 ஆண்டுகளில் ரூ.8,40,000 முதலீடு செய்வீர்கள். இதற்கு 12 சதவீத ரிட்டர்னாக ரூ.1,21,50,538 வட்டியைப் பெறுவீர்கள். உங்களுக்கு 60 வயதாகும் போது, ​​உங்களிடம் ரூ.1,29,90,538 இருக்கும். கிட்டதட்ட உங்களுக்கு ஒன்றரை கோடி கிடைக்கிறது.

விளம்பரம்

Also Read | 
பெண் பிள்ளைகளின் எதிர்காலம் காக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டம்! வட்டி விவரம் இங்கே!

எஸ்ஐபி மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தல்

பங்குச்சந்தையில் நேரடியாக பங்குகளை வாங்குவதை விட எஸ்ஐபி மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது குறைவான ஆபத்து தான். இதில் சராசரியாக உங்களுக்கு 12 சதவீத ரிட்டர்ன் கிடைக்கிறது. முக்கியமாக பெரும்பாலான அரசாங்க திட்டங்களை விட எஸ்ஐபி முதலீடு சிறப்பாக செயல்படுகின்றன.

கூட்டுத் தொகை

இதில் முதலீடு செய்வதால் உங்கள் பணத்தை காலப்போக்கில் கூட்டுத் தொகை வேகமாக வளரச் செய்கிறது. ஆகவே நீண்ட கால மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி-க்கள் நம்மை கோடீஸ்வரர் ஆக்குவதற்கான சிறந்த திட்டமாக இருக்கிறது.

விளம்பரம்

.

Read More

Previous Post

2027-ல் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும்: ஐஎம்எஃப் துணை இயக்குநர் கீதா கோபிநாத் | India to become third largest economy by 2027 IMF Gita Gopinath

Next Post

நாளை (ஆகஸ்ட் 17) வங்கிகளுக்கு விடுமுறையா? முழு விவரம்!

Next Post
நாளை (ஆகஸ்ட் 17) வங்கிகளுக்கு விடுமுறையா? முழு விவரம்!

நாளை (ஆகஸ்ட் 17) வங்கிகளுக்கு விடுமுறையா? முழு விவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin