தற்போதைய டிஜிட்டல் உலகில் தனிநபர் கடன்கள் மிகவும் எளிதாக கிடைப்பதால் பலருக்கும் வசதியான தேர்வாகவே மாறியிருக்கின்றன. வங்கி மட்டுமல்லாது வங்கி அல்லாத பிற நிதி நிறுவனங்களும் எளிதாக பணம் பெறும் வகையில், தற்போது கடன் வசதிகளை மேம்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில், ஒருவர் தனிநபர் கடனைப் பெறுவதற்கு என்னென்ன தேவைகள் உள்ளன? எந்த வங்கிகள் தனிநபர் கடன்களை வழங்குகின்றன? வட்டி விகிதம் என்ன? என்பதை இனி விரிவாகப் பார்ப்போம்.
மாதம் ரூ.15,000 சம்பாதிப்பவர்களும் அவர்களது திடீர் மருத்துவச் செலவுகள், வீட்டை சரிசெய்தல், திருமண நிகழ்வு போன்ற தேவைகளுக்காக தனிநபர் கடனைப் பெற முடியும். அந்த வகையில், வருமானத்திற்கு ஏற்ப சில வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் எந்தவிதப் பிணையுமில்லாமல், மிகவும் எளிதாக தனிநபர் கடன்களை வழங்குகின்றன.
தனிநபர் கடன் என்பது பிணை தேவைப்படாத வங்கி அல்லது அரசு அல்லாத தனியார் நிதி நிறுவனங்கள் (NBFC) மூலம் வழங்கப்படும் ஒரு பாதுகாப்பற்ற கடன் சேவையாகும். எளிய செயல்முறை, போதுமான குறைந்தபட்ச ஆவணங்கள், மாதாந்திரத் தவணைகள் மூலம் திருப்பிச் செலுத்தும் வசதி ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் இது நம்பிக்கைக்குரிய தேர்வாக இருந்து வருகிறது.
முக்கிய தகுதி விவரங்கள்:
மாத வருமானம்: குறைந்தபட்சம் ரூ.15,000 இருப்பது அவசியம்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர் 21 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வேலை நிலைத்தன்மை: தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் குறைந்தது 6 மாதங்களாவது பணியாற்றியிருக்க வேண்டும்.
கிரெடிட் ஸ்கோர்: 750 மற்றும் அதற்கும் மேலான கிரெடிட் ஸ்கோர்கள் சிறந்ததாகக் கருதப்படும். இருப்பினும், 685-க்கு மேல் இருந்தால்கூட பல நிறுவனங்கள் கடன் வழங்க வாய்ப்புள்ளது.
இணை விண்ணப்பதாரர்: வருமானம் குறைவாக இருந்தால் அல்லது கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், இணை விண்ணப்பதாரரை சேர்ப்பது கடன் பெறுவதில் உதவிகரமாக இருக்கலாம்.
ரூ.15,000 மாத சம்பளம் – தனிநபர் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் (NBFC):
1. ஆக்சிஸ் வங்கி (Axis Bank)
- குறைந்தபட்ச வருமானம்: ரூ.15,000
குறிப்பு: இச்சலுகை தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்
2. யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India)
- குறைந்தபட்ச வருமானம்: ரூ.15,000
குறிப்பு: பெரு நகரங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் மட்டுமே வழங்கப்படும்
3. டாடா கேபிடல் (Tata Capital)
- குறைந்தபட்ச வருமானம்: ரூ.15,000
குறிப்பு: தேர்வான நகரங்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன
4. இண்டஸ்இண்ட் வங்கி (IndusInd Bank)
- குறைந்தபட்ச வருமானம்: ரூ.15,000
குறிப்பு: அதிக கிரெடிட் ஸ்கோர் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தேவைப்படும் ஆவணங்கள்:
- அடையாளச் சான்று (ஆதார், பான், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை)
- முகவரிச் சான்று (பாஸ்போர்ட், வாடகை ஒப்பந்தம், பில்கள்)
- சம்பளச் சீட்டு (கடைசி 6 மாதங்கள்)
- வங்கி அறிக்கைகள்
- கேஒய்சி (KYC) ஆவணங்கள்
வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்:
வருடத்திற்கு 10.5% முதல் ஆரம்பமாகும் (வங்கியின் கொள்கை மற்றும் கிரெடிட் ஸ்கோர் அல்லது கடன் பெறும் தகுதியைப் பொறுத்து மாறுபடும்)
உங்கள் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும், இது எதிர் காலத்தில் கடன் பெறும் வாய்ப்பைக் குறைக்க வாய்ப்புள்ளது.
3. மறைமுகக் கட்டணங்கள்:
- செயலாக்கக் கட்டணம்
- முன்கூட்டியே திருப்பிச் செலுத்தும் அபராதம் போன்றவை இருக்கலாம்
எனவே, தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக இந்தக் கட்டணங்களை சரிபார்க்க வேண்டியது அவசியம்.
கடன் பெறும் வாய்ப்புகளை அதிகரிக்க:
- கிரெடிட் ஸ்கோர் சீராக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், குறைந்தது 750-க்கு மேல் இருக்க வேண்டும், ஆனால் 685-க்கும் மேல் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும்.
- ஏற்கனவே உள்ள கடன்களை குறைத்து, மாதாந்திரத் தவணைகளை சரியாக செலுத்த வேண்டியது அவசியம்.
- இணை விண்ணப்பதாரருடன் விண்ணப்பிப்பது, உங்களது திருப்பிச் செலுத்தும் திறனை வலுப்படுத்தும்.
- தற்போதைய நிறுவனத்தில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் பணிபுரிந்திருப்பது, பணியிடத்தில் நிலைத்தன்மையை உறுதி செய்ய உதவும்.
July 01, 2025 3:48 PM IST