மாண்டாயில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் கடந்த ஜூலை 14 அன்று தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
23 மாண்டாய் எஸ்டேட்டில் அமைந்துள்ள வெஸ்ட்லைட் ஜூனிபரில் நடந்த இந்த சம்பவம் குறித்து Stomp வாசகர் தகவல் கொடுத்தார்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி
ஊழியர் தங்கும் விடுதியில் உள்ள ஆறாவது மாடியில் தீ பற்றியதாக சொல்லப்படுகிறது.
dewansultandewans என்ற டிக்டாக் பயனரால் வெளியிடப்பட்ட அது தொடர்பான காணொளியில், கட்டிடத்தின் மேல் தள ஜன்னல்களில் இருந்து புகை எழுவதைக் காண முடிந்தது.
காலை 7:30 மணியளவில் இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகக் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் (SCDF) கூறியது.
ஊழியர்கள் யாருக்கும் காயமில்லை
இரண்டு ஹோஸ் ரீல்கள் மற்றும் நீரை பீச்சியடிக்கும் ஜெட் கருவிக்களை பயன்படுத்தி SCDF தீயை அணைத்தது.
நல்வாய்ப்பாக ஊழியர்கள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சிங்கப்பூரில் 6 வருடத்துக்கு முன் நடந்த சம்பவம் – வெளிநாட்டு ஊழியருக்கு சிறை!