• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மாணவர்களை மது குடிக்க வைத்த ஆசிரியர்.. அரசு பள்ளியில் அதிர்ச்சி.. வைரலாகும் வீடியோ!

GenevaTimes by GenevaTimes
April 28, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மாணவர்களை மது குடிக்க வைத்த ஆசிரியர்.. அரசு பள்ளியில் அதிர்ச்சி.. வைரலாகும் வீடியோ!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 28, 2025 8:06 PM IST

மத்திய பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவர் தனது பதவியின் கண்ணியத்தைப் பற்றி கவலைப்படாமல், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு செயலைச் செய்துள்ளார்.

ஆசிரியர் - மாணவன்ஆசிரியர் - மாணவன்
ஆசிரியர் – மாணவன்

மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர் செய்த செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விலையுயர்ந்த தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள், ஏனெனில் அவர்கள் சிறந்த கல்வியை தங்கள் குழந்தைகளுக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில் தான். ஏனெனினும் சில பெற்றோர்கள், பணம் செலுத்த முடியாத காரணத்தால், தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். ஆனால் கடந்த காலங்களைப் போலல்லாமல், இன்றைய காலக்கட்டத்திலும் அரசுப் பள்ளிகள் நல்ல கல்வியை வழங்குகின்றன.

இந்நிலையில், சில ஆசிரியர்கள் மோசமாக நடந்து கொள்கிறார்கள். புனிதமான ஆசிரியர் தொழிலில் இருந்துக் கொண்டு, அவர்கள் கேவலமான செயல்களை செய்கிறார்கள். சிலர் குடிபோதையில் பள்ளிக்கு வருகிறார்கள். மற்றவர்கள் வகுப்பறை நேரங்களில் தூங்கிவிடுவார்கள். இந்நிலையில் சமீபத்தில், மற்றொரு ஆசிரியரின் மோசமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இங்கே, ஒரு ஆசிரியர் தான் குடித்தது மட்டுமல்லாமல், தனது மாணவர்களுக்கும் குடிக்க கற்றுக் கொடுத்தார். இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் கட்னி மாவட்டத்தில் நடந்தது.

பர்வாரா தொகுதிக்கு உட்பட்ட கிர்ஹானி கிராமத்தின் அரசு தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் லால் நவீன் பிரதாப் சிங், மாணவர்களுக்கு மதுபானம் கொடுத்ததாக கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அவர் தனது அறையில் சில பள்ளி மாணவர்களுடன் ஒரு மதுபானம் விருந்து வைத்திருந்தார். மேலும், அவரே மதுபானங்களை கப்களில் ஊற்றி மாணவர்களுக்கு வழங்கினார். இந்த சம்பவத்தை ஒருவர் செல்போனில் பதிவு செய்தனர். பின்னர் அது சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டது. பதிவிடப்பட்டதை அடுத்து வேகமாக வைரலாகி, கலெக்டர் வரை சென்றடைந்தது.

இதனையடுத்தது, மாவட்ட ஆட்சியர் திலீப் குமார் யாதவ், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அதிகாரி ஓ.பி. சிங்கிற்கு உத்தரவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த வீடியோ பல்வேறு தொகுதி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டதாகவும், பின்னர் அந்த ஆசிரியர் லால் நவீன் பிரதாப் சிங் என அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் கூறினார். இதன் பின்னர் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மத்தியப் பிரதேச சிவில் சர்வீசஸ் (நடத்தை) விதிகளின் கீழ், தவறான நடத்தை, குழந்தைகளை மது அருந்த ஊக்குவித்தல் மற்றும் ஆசிரியரின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், லால் நவீன் பிரதாப் சிங் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். வைரலாகும் வீடியோவில், ஒரு நபர் ஒரு அறையில் உள்ள சிறுவர்களுக்கு கப்-களில் மதுபானங்களை கொடுப்பதை காணலாம். மேலும் அவர்களில் ஒருவரிடம் மதுபானத்தில் தண்ணீர் கலந்து குடிக்கச் சொல்வதையும் கேட்கலாம்.

First Published :

April 28, 2025 8:06 PM IST

Read More

Previous Post

ஐபிஎல் வரலாற்றில் சாதனை : 14 வயதில் சதம் அடித்து அசத்திய வீரர்

Next Post

ஐபிஎல் 2025: 14 வயது சிறுவன் சூர்யவன்ஷி அதிவேக சதம்.. குஜராத்தை எளிதாக வீழ்த்திய ராஜஸ்தான்

Next Post
ஐபிஎல் 2025: 14 வயது சிறுவன் சூர்யவன்ஷி அதிவேக சதம்.. குஜராத்தை எளிதாக வீழ்த்திய ராஜஸ்தான்

ஐபிஎல் 2025: 14 வயது சிறுவன் சூர்யவன்ஷி அதிவேக சதம்.. குஜராத்தை எளிதாக வீழ்த்திய ராஜஸ்தான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin