41
மாத்தளை மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான வலய மட்ட கால்பந்து தொடரில் மாத்தளை ஸாஹிரா தேசிய பாடசாலை அணி வெற்றியீட்டியது.
மாத்தளை ஹிந்து தேசிய பாடசாலை மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இந்தத் தொடரில் இறுதிப் போட்டியில் மாத்தளை அஜ்மீர் தேசிய பாடசாலை அணியை எதிர்கொண்ட மாத்தளை ஸாஹிரா தேசிய பாடசாலை 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
இந்தமூலம் மாத்தளை மாவட்ட சம்பியனான அந்தப் பாடசாலை அணி மாகாண மட்டப் போட்டிக்குத் தெரிவானது.
மாளிகைக்காடு குறூப் நிருபர்

