• Login
Thursday, August 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு NPP அரசுக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை

GenevaTimes by GenevaTimes
December 4, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தேசிய மக்கள் சக்தியால் மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான மக்கள் ஆணை எதுவும் பெறப்படவில்லை. அதற்கான முயற்சியில் தேசிய மக்கள் சக்தி ஈடுபடவும் இல்லை.

ஆனால், மாகாண சபையையும் விட ஒரு வலிமையான சபை – அனைத்து மக்களுக்கும் சமனான அந்தஸ்தை வழங்கக்கூடிய ஓர் அரசியலமைப்பு தேவை. அதில் மாகாண சபை இருக்குமா? இல்லையா? என்பதே விடயம். எனவே, இதுவரையும் மாகாண சபையை நீக்குவதற்கான எந்தவிதமான முன்மொழிவுகளும் முன்வைக்கப்படவில்லையென வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரும் திருமலை, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் ஒருங்கிணைப்பில், மாவட்ட செயலக மண்டபத்தில் திங்கட்கிழமை அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முஹம்மட் சாலி நளீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரான பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

1978 அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக டில்வின் சில்வா கருத்துத் தெரிவித்துள்ளார். அதாவது இந்த அரசியலமைப்பை மாற்ற வேண்டிய தேவை இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான மக்கள் ஆணை எதுவும் பெறப்படவில்லை. இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவர் அதில் குறிப்பிட்ட விடயம் இந்த மாகாண சபை அலகு போதியதல்ல, எனவே, இந்த விடயத்தில் ஒரு தீர்வை நோக்கிப் போக வேண்டும்.

அது மாத்திரமல்ல, புதிய அரசியலமைப்பை முன்வைக்கும்போது 13 ஆவது திருத்தச் சட்டம் அல்ல முதலாவது திருத்தம் தொடக்கம் 20 வரையிலான திருத்தங்கள் மாற்றப்பட்டு ஒரு புதிய அரசியலமைமைப்பு முன்வைக்கப்படவுள்ளது. இந்த விடயம் பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்ட விடயமாக நாங்கள் பார்க்கின்றோம். ஆகவே, தேசிய மக்கள் சக்தியால் மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான மக்கள் ஆணை எதுவும் பெறப்படவில்லை. அதற்கான முயற்சியில் தேசிய மக்கள் சக்தி ஈடுபடவும் இல்லை.

ஆனால், மாகாண சபையையும் விட ஒரு வலிமையான சபை – அனைத்து மக்களுக்கும் சமனான அந்தஸ்தை வழங்கக்கூடிய கூடிய ஓர் அரசியலமைப்பு தேவை என்றார்.

The post மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு NPP அரசுக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை appeared first on Thinakaran.

Read More

Previous Post

தவறுகளிலிருந்து என்னை எம்ஏசிசி விடுவித்தது – ஹலீம் சாத்

Next Post

மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி: மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை

Next Post
மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி: மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை

மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி: மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin