Last Updated:
முகமது சிராஜ் மற்றும் மஹிரா சர்மாவை இணைத்து பேசுவது பொய்யானது என்று சிராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
பிக்பாஸ் பிரபலமான மஹிரா சர்மாவையும் தம்மையும் இணைத்துப் பேசுவதில் உண்மையில்லை என்று பிரபல வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் இன்று தொடங்க இருக்கும் நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக முகமது சிராஜ் விளையாட இருக்கிறார். இந்த சூழலில் சிராஜும், மஹிரா சர்மாவையும் இணைத்து இணையவாசிகள் பேசிவந்தனர்.

சிராஜ் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி
இந்த நிலையில், இப்படியாகப் பேசப்படுவது பொய் என்று முகமது சிராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே அந்தப் பதிவை அவர் நீக்கிவிட்டார்.

மஹிரா சர்மா இன்ஸ்டாகிராம் ஸ்டோரி
பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அந்தப் பதிவை சிராஜ் நீக்கியதால், பலருக்கும் சந்தேகம் வலுத்தது. மேலும் இவருடன் பேசப்பட்ட தொலைக்காட்சி நடிகை மஹிரா சர்மா என்பவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்தவர். மஹிரா சர்மாவிடம் பத்திரிக்கையாளர்கள் இதுகுறித்து கேட்டபோது, ‘நான் யாரையும் டேட் செய்யவில்லை’ எனத் தெரிவித்தார்.
March 22, 2025 1:29 PM IST


