தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ள யோசனைக்கே, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், தியகம மஹிந்த ராஜபக்ச சர்வதேச விளையாட்டரங்கின் தற்போது நடைமுறையில் உள்ள மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிர்மாணப் பணிகளை, இராணுவத்தினரிடம் ஒப்படைப்பதற்கு 2024-01-08 இல் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த விளையாட்டரங்கில் விளையாட்டுத் திடல் மற்றும் புதிய மரதன் ஓட்டப் பகுதி, இரண்டாவது பார்வையாளர் கட்டிடம் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்

