மஹர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், இந்த மாதம் 03, 04 மற்றும் 05 ஆகிய அடுத்த மூன்று நாட்களுக்கு பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் மஹர சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று (01) சிறையில் ஏற்பட்ட கலவரம் மற்றும் சொத்து சேதம் காரணமாக, அடுத்த மூன்று நாட்களுக்கு பார்வையாளர்கள் கைதிகளை சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சிறை கண்காணிப்பாளர் குறிப்பிட்டார்.
104 கைதிகள் 07 சிறைகளுக்கு மாற்றம்
இதற்கிடையில்,மஹர சிறையிலிருந்து மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் பட்டியல் சிறைக்கு வெளியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 104 கைதிகள் 07 சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கலவரத்தால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளின் பெயர்ப் பட்டியலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
அதன்படி, இந்தச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது, மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

