கலவரத்தின் காரணமாக சிறைச்சாலையின் பல கட்டடங்கள், உபகரணங்கள் மற்றும் அரச சொத்துகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட வன்முறை கலவரத்தைத் தொடர்ந்து, சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களின் தீவிரத்தை வெளிப்படுத்தும் முதல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
கலவரத்தின் காரணமாக சிறைச்சாலையின் பல கட்டடங்கள், உபகரணங்கள் மற்றும் அரச சொத்துகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
சேதங்களின் முழுமையான அளவை மதிப்பிடும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் பின்னர் ஏற்பட்ட இழப்புகள் குறித்த விரிவான அறிக்கை வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, கலவரம் தொடர்பான விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சம்பவத்துக்கான காரணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.