• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மழைக் காலத்தில் ஜொமோட்டோ, ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்தால் கூடுதல் கட்டணம்! | Zomato Swiggy Subscription Users To Pay Extra Delivery Charges During Rain

GenevaTimes by GenevaTimes
May 16, 2025
in வணிகம்
Reading Time: 8 mins read
0
மழைக் காலத்தில் ஜொமோட்டோ, ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்தால் கூடுதல் கட்டணம்! | Zomato Swiggy Subscription Users To Pay Extra Delivery Charges During Rain
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புது டெல்லி: ஜொமோட்டோ மற்றும் ஸ்விக்கி உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் மழைக்காலங்களில் உணவு ஆர்டர் செய்யும்போது இனி கூடுதல் கட்டணங்கள் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்விக்கி மற்றும் அதன் ஆன்லைன் உணவு விநியோக போட்டியாளரான ஜொமோட்டோ ஆகியவை மழைக் காலத்துக்கான அதன் கோல்டு உறுப்பினர் சலுகைகளில் புதிய மாற்றத்தை செய்துள்ளது. இதன்படி இன்று முதல் (வெள்ளிக்கிழமை), மழைக் காலத்தின் போது கோல்டு உறுப்பினர்களுக்கு இனி சர்ஜ் கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட மாட்டாது. எனவே பணம் செலுத்தும் கோல்டு சந்தாதாரர்கள் கூட இனி மழை பெய்யும்போது உணவு விநியோகத்துக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

நிறுவனம் இந்த மாற்றத்தைப் பற்றி செயலியில் அறிவிப்பு மூலம் பயனர்களுக்குத் தெரிவித்துள்ளது. அதில், “மே 16 முதல், மழையின்போது சர்ஜ் கட்டண விலக்கு உங்கள் கோல்டு சலுகைகளின் ஒரு பகுதியாக இருக்காது” என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், சர்ஜ் கட்டணத்தின் சரியான தொகையை ஜொமோட்டோ இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை. கடினமான வானிலை காலங்களில் பணிபுரியும் டெலிவரி பணியாளர்களுக்கு சிறந்த இழப்பீட்டை வழங்க இந்த கூடுதல் கட்டணம் உதவும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஸ்விக்கி ஒன் (Swiggy One) சந்தாதாரர்கள் உட்பட அதன் பயனர்களிடமிருந்து இதேபோன்ற மழைக்காலக் கட்டணத்தை வசூலிக்கிறது. இது போன்ற கட்டணங்கள் விரைவில் அனைத்து உணவு விநியோக தளங்களிலும் பொதுவானதாக மாறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஜொமோட்டோ கோல்டு (Zomato Gold) உறுப்பினர்கள் இலவச டெலிவரி மற்றும் மழையின்போது சர்ஜ் கட்டணம் இல்லாதது போன்ற சலுகைகளை அனுபவித்தனர். ​​இந்த புதிய விதியின் மூலம், வழக்கமான பயனர்களும், கோல்டு உறுப்பினர்களும் இனி மோசமான வானிலையின்போது ஒரே மாதிரியாக நடத்தப்படுவார்கள். இதை ஈடுசெய்ய ஜொமோட்டோ எந்த புதிய சலுகைகளையும் அறிவிக்கவில்லை.

அருகிலுள்ள உணவகங்களிலிருந்து (7 கி.மீ.க்குள்) இலவச டெலிவரி மற்றும் 30 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளிட்ட சில முக்கிய சலுகைகளை ஜொமோட்டோ கோல்டு இன்னும் வழங்குகிறது. அதேபோல பண்டிகைக் காலத்தில் ஜொமோட்டோ கூடுதல் கட்டணங்களை விதிக்கிறது. இந்தக் கட்டணங்கள் அதிக செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்ட உதவும் என்று சொல்லப்படுகிறது.



Read More

Previous Post

ஆசிட் வீச்சில் இருந்து தப்பிய 17 வயது சிறுமி… 95.6% மதிப்பெண்கள் பெற்று சாதனை…!

Next Post

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்… மக்கள் மத்தியில் அச்சம்!

Next Post
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்… மக்கள் மத்தியில் அச்சம்!

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்… மக்கள் மத்தியில் அச்சம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin