கோலாலம்பூர்:
கோலாலம்பூர் நகராண்மை கழகத்தின் (DBKL) முன்கூட்டியத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான தீவிரக் கண்காணிப்பு காரணமாக, தலைநகரில் வெள்ள அபாயம் உள்ள இடங்களின் எண்ணிக்கை 30-லிருந்து 14-ஆகப் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது என இளைஞர், விளையாட்டு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.
மலேசியப் புற்றுநோய் சங்கத்துடன் (NCSM) இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மாமோகிராம் திட்டத் தொடக்க விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இத்தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
குறிப்பாக, சுங்கை தோபா உட்பட சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள வெள்ள அபாயப் பகுதிகள் தற்போது நகராண்மை கழகத்தின் சிறப்புக் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“தலைநகரில் திடீர் வெள்ளப்பெருக்கைத் தடுக்கும் பொருட்டு, ஆறுகளைத் தொடர்ந்து தூய்மைப்படுத்துதல், வடிகால்களில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றுதல் மற்றும் நீர் வழிந்தோடும் பாதைகளைச் சீரமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன,” என கோலாலம்பூர் மேயர் டத்தோ ஃபத்லூன் மாக் உஜுத் கூறினார்.
மேலும், திடீர் வெள்ளம் போன்ற அவசரகாலக் கடமைகளின் போது மீட்பு அதிகாரிகளின் நலனைப் பேணவும், அவர்களின் உணவு மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மலேசியப் பொது பாதுகாப்புப் படைக்கு (APM) கூடுதலாக RM30,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.
The post மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்: சிகாம்புட் மற்றும் சுங்கை தோபா பகுதிகளுக்குச் சிறப்புக் கவனம்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

