ஒட்டுமொத்த நகரமும் மிகப்பெரிய ஆடம்பர குடியிருப்பில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தால் எப்படியிருக்கும் என கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஆமாங்க, ஒரே சமூகமாக வாழ்தல் என்பதை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது விட்டியர் அலாஸ்கா நகரம். இங்குள்ள 14 மாடி பெகிச் டவர் என்ற கட்டிடம் உலகின் மிக உயரமான தங்குமிடமாக கருதப்படுகிறது.
இங்கு நீங்கள் மளிகை பொருட்கள் வாங்கலாம். தபால் நிலையத்திற்குச் செல்லலாம். துணி துவைத்துக் கொண்டே உங்கள் நண்பரோடு உரையாடலாம். ஆனால் இவை எதற்கும் நீங்கள் கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியமே இல்லை.
பனி சூழ்ந்த மலைகள் மற்றும் பனிப்பாறைகளுக்கு இடையே அமைந்துள்ளது இந்த கட்டிடம். இதில் தோராயமாக 273 பேர் குடியிருக்கிறார்கள். மற்ற நகரங்களில் உள்ள சராசரி அடுக்குமாடி குடியிருப்பு போல் இதை நீங்கள் நினைத்துவிடக் கூடாது. உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் இந்த கட்டிடத்தின் முதல் மாடியில் பெற்றுக்கொள்ள முடியும். மளிகை கடை, காவல் நிலையம், தபால் நிலையம் என அனைத்தும் கட்டிடத்தின் உள்ளேயே இருக்கிறது.
தங்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் ஒரே இடத்தில் எளிதாக கிடைப்பது விட்டியரில் வாழும் பலருக்கும் சௌகர்யமாக இருந்தாலும், இன்னும் சிலரோ எத்தனை நாள்தான் இப்படி நான்கு சுவருக்குள்ளேயே பார்த்த நபர்களையே பார்த்துக் கொண்டு முடங்கிக் கிடக்க வேண்டுமோ என கவலைப்படுகிறார்கள்.
இங்கிருக்கும் விட்டியர் பள்ளியை பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். குளிர்காலத்தில் நகரம் முழுவதும் பனி சூழ்ந்திருப்பதால், பள்ளிக்கு எளிதாக செல்வதற்கு வசதியாக சுரங்கப்பாதையை இவர்களே அமைத்துள்ளார்கள்.
1956 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் ஆரம்பத்தில் ராணுவ முகாமாக செயல்பட்டது. இனிமேல் துப்பாக்கிகளுக்கு வேலையில்லை என்ற நிலை வந்த பிறகுதான் மக்கள் வசிக்கக் கூடிய அடுக்குமாடி குடியிருப்பாக மாற்றப்பட்டது. தற்போது பனிப் பிரதேசங்களில் வாழும் பெங்குயின் போல ஒரே குடையின் கீழ் அனைவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.
குளிர்காலத்தில் பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் 9 ஆரோக்கிய நன்மைகள்.!
விட்டியர் அலாஸ்கா நகரில் வசிக்கும் பெரும்பாண்மையினர் அருகிலுள்ள துறைமுகத்தில் வேலை செய்கிறார்கள். துறைமுகம் என்றதும் நீண்ட தூரம் இருக்குமோ என நினைத்துவிடாதீர்கள். இவர்கள் வசிக்கும் குடியிருப்பில் இருந்து கல் எறியும் தூரத்தில்தான் துறைமுகம் அமைந்துள்ளது. மக்களின் வசதிக்காக குடியிருப்பின் அருகிலேயே பல ஃபிட்னஸ் மையங்களும் பல்வேறு கஃபேக்களும் உள்ளது.
இதனால் இங்குள்ள மக்களுக்கு எல்லா பொருட்களும் எளிதாக கிடைப்பதோடு நெருப்பிற்கான செலவும் குறைகிறது. ஆமாங்க, பனிப்புயல்களும், பனி மழையும் அடிக்கடி பெய்யும் பகுதி என்பதால் அவ்வளவு சீக்கிரத்தில் நெருப்பு மூட்ட முடியாது. ஆகவே தான் நெருப்பை மதிப்பு வாய்ந்த சொத்தாக இவர்கள் கருதுகிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…