Last Updated:
பிரியங் கார்கே கர்நாடக அரசின் அமைச்சராக செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக செயலாற்றி வந்த அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செயல்பட்டு வருபவர் மல்லிகார்ஜுன கார்கே. கர்நாடகாவைச் சேர்ந்த இவருக்கு 2 மகள்கள் மற்றும் 3 மகன்கள் என மொத்தம் 5 பிள்ளைகள். இதில் ஒருவரான பிரியங் கார்கே கர்நாடக அரசின் அமைச்சராக செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக செயலாற்றி வந்த அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றார். தொடர்ந்து அவர் சித்தராமையா தலைமையில் கர்நாடக அரசில் அமைச்சரானார். அதன்படி, பஞ்சாயத்து ராஜ், கிராமப்புற வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளை கவனித்து வருகிறார்.
இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகன் மிலிந்த் கார்கேவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மிலிந்த் கார்கே, கடந்த பல நாட்களாக அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில், தற்போது மிகவும் கவலைக்கிடமாக கூறப்படுகிறது.
July 27, 2025 8:56 PM IST

