நேபாளத்தில் சாகர்மாதா என்று அழைக்கப்படும் எவரெஸ்ட், கடல் மட்டத்திலிருந்து 8,848.86 மீட்டர் உயரத்தில் உள்ளது, இது பூமியின் மிக உயரமான மலை சிகரமாகும். நேபாளத்தை சேர்ந்த கமி ரீட்டா 29ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார். எவரெஸ்ட் மலையடிவாரத்தில் ஷெர்பா சமூகத்தை சேர்ந்தவர் கமி ரீட்டா. போர்ட்டராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் பின்னர் மலையேறுதல் வழிகாட்டியாக மாறினார். அவர் எவரெஸ்ட் சிகரத்தை முதன்முறையாக 1994இல் தனது 24 வயதில் ஏறினார். கின்னஸ் புத்தகத்தின் படி, ‘எவரெஸ்ட் மேன்’ என்றும் அழைக்கப்படும் கமி ரீட்டா ஒவ்வொரு ஆண்டும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிக்க : “அவர்களுக்காக வழிவிடுகிறேன்” – ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன்!
2020 ஆம் ஆண்டில், கொரோனா தொற்றுநோய் காரணமாக நேபாளத்தில் எவரெஸ்டின் தெற்குப் பகுதி ஏறுபவர்களுக்கு மூடப்பட்டு, 2021 இல் ஒரு பகுதி மீண்டும் திறக்கப்பட்டது, மே 2021 இல் காமி ரீட்டா தனது 25ஆவது ஆண்டாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து மீண்டும் சாதனை படைத்தார். 2023 இல், கமி ரீட்டா எவரெஸ்ட் சிகரத்தை 27ஆவது முறையாக ஏறி, சக வழிகாட்டியான பசாங் தாவா ஷெர்பாவுடன் சாதனையை சமன் செய்தார். தொடர்ந்து அந்தாண்டு மே மாதமே காமி ரீட்டா தனது 28ஆவது எவரெஸ்ட் ஏறுதலை முடித்ததன் மூலம் இந்த சாதனையை முறியடித்தார்.
இந்நிலையில், காத்மாண்டுவில் இருந்து ஸ்பிரிங் சீசன் எவரெஸ்ட் பயணத்தை 28 பேர் கொண்ட குழுவுடன் மேற்கொண்ட கமி ரீட்டா, உலகின் மிக உயர சிகரமான எவரெஸ்ட்டின் 71 ஆண்டுகால மலையேறுதல் வரலாற்றில் அதிக அளவில் 29ஆவது முறையாக ஏறி வராலாற்று சாதனை படைத்துள்ளார். மே 12ஆம் தேதி காலை 7.25 மணிக்கு அவர் அடைந்தார். முன்னதாக தனது சாதனை குறித்து கூறிய, சாதனைக்காகவோ, எண்களை கணக்கிட்டோ மலையேறுவதில்லை என கூறினார். இவரது சகோதரியான லக்பா ஷெர்பா, இதுவரை 17 முறை மலையேற்ற வீரர்களுடன் எவரெஸ்டு மலையை ஏறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மே 29, 1953 இல், திபெத்தைச் சேர்ந்த நியூசிலாந்தின் எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளி ஷெர்பா டென்சிங் நோர்கே ஆகியோர் முதலில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
