Last Updated:
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மலேசியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ஆயிரம் வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
சபா மாநிலம், சந்தக்கான் பட்டு சாப்பி (Batu Sapi) பகுதியில் உள்ள கம்போங் பஹாகியா கிராமத்தில் நேற்று (ஏப்ரல் 19) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. வீடுகள் மரத்தூண்களால் அமைக்கப்பட்டிருந்ததாலும், பலத்த காற்று வீசியதாலும் தீ மளமளவெனப் பரவியது. இதனால், தூங்கிக் கொண்டிருந்த மக்கள் உடமைகளைக் கூட எடுக்க முடியாமல் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினர்.
A huge fire tore through the floating village of Kampung Bahagia in Sabah, Malaysia, destroying more than 200 homes and leaving over 400 people displaced.
The blaze spread quickly overnight because of strong winds and tightly packed wooden houses. pic.twitter.com/n2qQ4f6WQp— Al Jazeera English (@AJEnglish) April 19, 2026
குறுகலான பாதைகள் மற்றும் கடலில் நீர்மட்டம் குறைவாக இருந்த காரணத்தால், தீயணைப்பு வாகனங்கள் உள்ளே நுழைய முடியாமல் மீட்புப் பணியில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. சுமார் 35-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் மூன்று தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

