Last Updated:
மலேசியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள், சென்னையில் சாலை பள்ளங்களை நிரப்பும் குழு, கள்ளக்குறிச்சி பெண்கள் சிறுதானிய விற்பனை குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
மலேசியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் இருப்பதும் அவற்றில் தமிழ் கற்பிக்கப்படுவதும் சிறப்புக்குரிய விஷயம் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்துகொண்ட பிரதமர் மோடி, மலேசியாவுடனான இந்திய உறவை விவரித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு சொஸைட்டி சங்கத்தின் பெரிய பங்களிப்பு இருக்கின்றது. அதன் பெயர் ‘Malaysia India Heritage Society’ என்றார். அத்துடன் மலேசியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் இருப்பதும் அவற்றில் தமிழ் கற்பிக்கப்படுவதும் சிறப்புக்குரிய விஷயம் எனக்குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரம் விரைவான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, நாட்டு மக்களிடையே பெரிய அளவில் வெளிப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
தூய்மை தொடர்பாக இளைஞர்கள் விழிப்புடன் இருப்பதாக கூறிய அவர், சாலை பள்ளங்களை இட்டு நிரப்பும் பணிகளை சென்னையைச் சேர்ந்த ஒரு குழு, சிறப்பாகச் செய்வதாகவும் தெரிவித்தார்.
சிறுதானியங்கள் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல், மக்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தையும் உறுதி செய்கிறது. சிறுதானியங்கள் மீது மக்களிடையே ஆர்வம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள், சிறுதானிய விற்பனையில் சிறந்து விளங்குவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
Delhi,Delhi,Delhi


