[ad_1]
கோலாலம்பூர்:
புரோட்டோன் (Proton) நிறுவனம், நாட்டின் முதல் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை, தாஞ்சோங் மாலிமில் (Tanjung Malim) அதிகாரப்பூர்வமாகத் திறந்து, புதிய வரலாற்றைப் படைத்துள்ளது.
இந்தத் தொழிற்சாலை, புரோட்டோன் இ.மாஸ் 7 (Proton e.MAS 7) என்ற புதிய மின்சாரக் காரை உற்பத்தி செய்கிறது. இதன் தொடர்ச்சியாக, விரைவில் இ.மாஸ் 5 (e.MAS 5) காரும் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
RM80 மில்லியன் மதிப்புள்ள புதிய தொழிற்சாலை
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் (Datuk Seri Anwar Ibrahim) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, இந்த RM80 மில்லியன் மதிப்புள்ள தொழிற்சாலை, 13-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ், 2026-ஆம் ஆண்டிற்கு முன், உள்நாட்டு மின்சாரக் கார் உற்பத்தியை நோக்கிய, அரசாங்கத்தின் இலக்கை அடைய, ஒரு முக்கியத் தூண்டுகோலாக அமையும்.
புரோட்டோன் இ.மாஸ் 7, அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், சுமார் 5,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகி, மலேசியாவில், அதிக விற்பனையான மின்சாரக் கார் மாடலாக, உருவெடுத்துள்ளது.
மலிவு விலையிலான இ.மாஸ் 5 கார், அறிமுகத்திற்கு முன்பு, 300,000 கிலோமீட்டர் தூரத்திற்கு, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள், 13-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ், தேசிய வாகனத் துறையில், புரோட்டோனின் முக்கியப் பங்கை உறுதிப்படுத்துகிறது