சிலாங்கூரில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் நேற்று (அக்டோபர் 11) நடந்த பேருந்து விபத்தில் சிங்கப்பூரில் பணிபுரிந்த வெளிநாட்டு கட்டுமான ஊழியர் ஒருவர் மாண்டார்.
நேற்று அதிகாலை சுமார் 3:15 மணியளவில் நடந்த இந்த விபத்தில், சூப்பர் நைஸ் எக்ஸ்பிரஸ் பேருந்து சறுக்கி அறிவிப்பு பலகையில் மோதியதாக சொல்லப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு.. புதுமுகங்களை டார்கெட் செய்யும் கும்பல் – சிக்கிய இருவர் கைது
இதில் சிங்கப்பூரர்கள் உட்பட பேருந்து ஓட்டுநர் மற்றும் பிற பயணிகள் காயமடைந்ததாக மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தப் பேருந்து பூன் லேயிலிருந்து பேராக்கில் உள்ள ஈப்போவுக்குச் சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கோலாலம்பூர் நோக்கி செல்லும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 293 கி.மீ தூரத்தில் இருந்த வடிகால் பள்ளத்தில் பேருந்து சாய்ந்தது என்றும் பின்னர் கம்பத்தில் மோதி கட்டுப்பாட்டை இழந்ததாகவும் கூறப்படுகிறது.
பேருந்தில் ஓட்டுநர் உட்பட மொத்தம் 29 பேர் பயணித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதில் 5 பேர் சிங்கப்பூரர்கள்.
இந்த சம்பவத்தில், சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் பணிபுரிந்த 59 வயதான ஊழியர் மரணித்ததாகவும் அவர் மலேசிய நாட்டைச் சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
பேருந்தின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்த ஊழியருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
காயமடைந்த பயணிகள் தற்போது ஐந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பங்களாதேஷ் ஊழியரின் பிறப்புறுப்பை கட் செய்த பெண்.. மனைவி இருப்பதை மறைத்து பெண்ணுடன் உறவு