மலேசியாவில் வாரத்தில் மூன்றாவது து ப்பாக்கி சூ*ட்டு சம்பவம் நடந்தேறியுள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி மற்றும் அச்சமடைந்துள்ளனர்.
நேற்று ஜூன் 20 அன்று கோலாலம்பூருக்கு அருகே உள்ள கிளாங், மேருவில் நடந்த சம்பவத்தில் 46 வயதுமிக்க கார் ஓட்டுநர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சிங்கப்பூர் டோட்டோ (TOTO) லாட்டரி: ரூ.83 கோடியை அலேக்கா தூக்கிய ஒரே நபர்
கடந்த வாரத்தில் மட்டும் அந்தப் பகுதியில் நடந்த மூன்றாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இது ஆகும்.
அன்று பிற்பகல் 3:37 மணியளவில், மோட்டார் சைக்கிள்கள் விற்கும் கடைக்கு வெளியே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக மலேசிய மாவட்ட காவல்துறை உறுதிப்படுத்தியது.
காரின் ஓட்டுநர் இருக்கையில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் உறுதி செய்து அறிவிக்கப்பட்டது.
அந்த காரின் மீது குறைந்தது ஆறு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படம் ஒன்றில் ஓட்டுநரின் பக்கவாட்டு ஜன்னலில் தோட்டா துளைகளைக் காணமுடிந்தது.
இந்த கொலை வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.
சரவாக் மற்றும் சிலாங்கூரில் நடந்தச் சம்பவங்களுடன் இந்த துப்பாக்கிச் சூடும் தொடர்புடையதாக நம்பப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர்.
இந்த வாரத்தில் நடந்த மற்ற 2 சம்பவங்கள்
ஜூன் 17 அன்று, செராஸில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு வெளியே இரண்டு ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், ஹெல்மெட் அணிந்த மர்ம கும்பல் அவர்களை நோக்கி ஓடி வந்து பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஜூன் 13 அன்று, கோலாலம்பூரில் பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
Photo: Sin Chew Daily News

