மலேசியாவில் சிங்கப்பூரர் ஒருவருக்கு 72 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டதாக ஆங்கில செய்தி தளங்கள் கூறுகின்றன.
தனது மனைவி மற்றும் மாற்றான் மகன் இருவரையும் தீ*த்து கட்டியதற்காக சிங்கப்பூர் ஆடவரான அவருக்கு கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் கைது – இந்த தவறை யாரும் செய்யாதீங்க!
2019 ஆம் ஆண்டில், அவர்களின் உட*கள் துண்டு துண்டான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தி ஸ்டார் தளம் கூறியுள்ளது.
27 வயதுமிக்க மனைவி நோர்பசீரா பிடின் மற்றும் இவருக்கு பிறந்த 11 வயதுமிக்க மகன் முஹம்மது இமான் அஷ்ரஃப் அப்துல்லா ஆகியோரின் மரணத்திற்கு காரணமான ஷாருல் நிஜாம் சுரைமி (36) என்ற அவர் மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்தச் சம்பவம், 2019 ஆம் ஆண்டு மலாக்காவில் உள்ள வீட்டில் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், மேலும் மனைவி விவாகரத்து செய்வதாக மிரட்டியதும் இந்த சம்பவத்துக்கான காரணமாக முன்னர் கூறப்பட்டது.
இந்த வாக்குவாதம் கடும் கோபமாக மாறி இந்த சம்பவம் அரங்கேறியதாகவும் சொல்லப்படுகிறது.
சிங்கப்பூரில் இருந்து நாட்டை விட்டு வெளியேற இருந்த இந்திய ஆடவரை வளைத்து பிடித்த போலீஸ்

