கோலாலம்பூர்:
மலேசியாவின் வேலையின்மை விகிதம் கடந்த ஆண்டு 3.2% ஆகக் குறைந்ததாக மலேசிய புள்ளிவிவரத் துறை (DOSM) வெளியிட்ட 2024ஆம் ஆண்டுக்கான பட்டதாரி புள்ளிவிவர அறிக்கை தெரிவித்துள்ளது.
அறிக்கையின் படி, நாட்டின் பட்டதாரி எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 5.98 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், பட்டதாரிகளுக்கான வேலையின்மை விகிதம் 2023இல் 3.4% இருந்து 2024இல் 0.2% ஆகக் குறைந்தது என தலைமைப் புள்ளிவிவர அதிகாரி டாக்டர் முகமட் உஸிர் மைடின் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, பட்டம் பெற்ற பின் மூன்று மாதங்களுக்குள் 61.1% பட்டதாரிகள் வேலை பெற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சியளிக்கும் வளர்ச்சியாகும்.
2024ஆம் ஆண்டில் மொத்தம் 4.98 மில்லியன் பட்டதாரிகள் வேலை வாய்ப்பில் இருந்தனர், இது 2023ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 4.76 மில்லியனுடன் ஒப்பிடும்போது 4.6% அதிகம் என்பதைக் காட்டுகிறது.
இது மலேசியாவில் வேலை சந்தை நிலைமைகள் தொடர்ச்சியாக வலுவடைந்து வருவதை வெளிப்படுத்துகிறது என்று டாக்டர் உஸிர் கூறினார்.
The post மலேசியாவின் வேலையின்மை விகிதம் 3.2% ஆகக் குறைந்தது appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

