கோலாலம்பூர் | 29 மார்ச் 2026
மலேசியாவின் தீபகற்பப் பகுதிகள், சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் பல இடங்களில் இன்று மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதிக்கப்படக்கூடிய பகுதிகள்: 1. தீபகற்ப மலேசியா: பினாங்கு: தென்மேற்கு, வடகிழக்கு மற்றும் செபராங் பிறை உத்தாரா பகுதிகள.
• பேராக்: பத்தாங் பாடாங் மற்றும் முவாலிம்.
• பகாங்: கேமரன் ஹய்லண்ட்ஸ், ரவூப் மற்றும் ரொம்பின்.
• ஜொகூர்: செகாமட், குளுவாங், குலாய், கோத்தா திங்கி மற்றும் ஜொகூர் பாரு.
2. சரவாக்:
• கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான் மற்றும் பெத்தோங் (சாராத்தோக் & காபோங்).
• சரிக்கேய், சிபு மற்றும் கபிட்.
• முகா (தஞ்சோங் மானிஸ், தாரோ & மாத்து), பிந்துலு (தாதாவ்) மற்றும் லிம்பாங்.
3. சபா:
• உட்பகுதி: சிபித்தாங், தெனோம், பியூஃபோர்ட் மற்றும் நபாவான்.
• மேற்குக் கரை: பாப்பார், புத்தாத்தான், பெனாம்பாங், கோத்தா கினபாலு, துவாரான் மற்றும் கோத்தா பெலுட்.
• தவாவ் மற்றும் லகாட் டத்து பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.




