புத்ராஜெயா:
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ ஹாஷிம் ஹம்சா இன்று மலாயாவின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
நவம்பர் 14 அன்று ஓய்வு பெற்ற டான் ஸ்ரீ ஹஸ்னா ஹாஷிமின் இடத்தை நிரப்ப 64 வயதான ஹாஷிம் நியமிக்கப்பட்டார்.
ஹாஷிம் 2021 இல் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
முன்னதாக, மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம், இஸ்தானா நெகாராவில் ஐந்து நீதிபதிகளுக்கும் நியமன ஆவணங்களை வழங்கினார்.
இந்த விழாவில் தலைமை நீதிபதி டத்தோஸ்ரீ வான் அகமட் ஃபாரிதட் வான் சாலே, பிரதமர் துறை (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அசலினா ஓத்மான் சைட் மற்றும் அட்டர்னி ஜெனரல் டான் ஸ்ரீ முகமட் டுசுகி மொக்தார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் மற்றும் ஆட்சியாளர்களின் முத்திரையின் காப்பாளர் டான் ஸ்ரீ சையத் டேனியல் சையத் அகமது ஆகியோரும் கலந்து கொண்டனர்.




