கோலாலம்பூர், நவம்பர் 26:
மலாக்காவின் சாலைப் போக்குவரத்துத் இலாகா அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அன்று ஆயேர் கெரோவில் மேற்கொண்ட வழக்கமான வாகன சோதனையின்போது, ஒரு ஆடம்பர டொயோட்டா வெல்ஃபையர் கார் பெரோடுவா கனஞ்சில் காரின் பதிவு எண்ணைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து மலாக்கா சாலைப் போக்குவரத்து இலாகா இயக்குனர் சித்தி ஸரினா முகமட் யூசோப் கூறுகையில், தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான இந்த வாகனம் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, இது, வாகன மோசடிச் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இதனிடையே, ஒரு உயர்தர MPV-க்கும் ஒரு சாதாரணக் காரின் பதிவேட்டிற்கும் இடையே உள்ள முரண்பாடுகளை அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
சாலை வரி அல்லது பிற சட்டப் பொறுப்புகளைத் தவிர்ப்பதற்காக இந்தத் தந்திரம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
மேலும், இந்தக் கார் மேலதிக விசாரணைக்காகப் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம், வாகனக் குளோனிங் மற்றும் மோசடிச் செயல்களைத் எதிர்த்துப் போராடுவதற்கானத் தொடர்ச்சியான முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
கடுமையானத் தண்டனைகளைத் தவிர்க்க, வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களுடன் அனைத்து ஆவணங்களும் ஒத்துப்போகின்றனவா என்பதை உறுதி செய்யுமாறு JPJ வலியுறுத்தியுள்ளது.




