பொருளாதாரத்தை முறையாக கையாள சரியான திட்டமிடல் அவசியம். பெரும்பாலான நேரத்தில் பொருளாதார இலக்குகளை அடைவதற்காகவோ அல்லது அவசர தேவைக்காகவோ முதலீடுகள் அல்லது லோன்கள் வாங்குவதற்கான தேவை ஏற்படுகிறது.
எனினும் ஒரு சிலர் தனிநபர் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான எளிமையான விதிகளை உதாசீனப்படுத்திவிட்டு கிரெடிட் கார்டு கடன்கள் மற்றும் தனிநபர் கடன்களை தேர்வு செய்கின்றனர். பிசினஸ், சொத்து பதிவு கட்டணங்கள், வெளிநாட்டு பயணம் அல்லது மெடிக்கல் செலவுகளுக்கு கோல்ட் லோன் போன்றவை மிக எளிதான ஆப்ஷனாக அமைகிறது.
தனிநபர் கடன்கள் 12 சதவீதம் மற்றும் அதற்கு மேல் கிடைக்கிறது. அதே நேரத்தில் கோல்டு லோன் 8 முதல் 16 சதவீதம் வரையிலான குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கிறது. அதுமட்டுமில்லாமல் கோல்டு லோன் தனிநபர் கடனை காட்டிலும் குறைவான ப்ராசஸ் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. கிரெடிட் ஆப்ஷன்களை விட கோல்டு லோன் மேலானது என்பதற்கான ஒரு சில காரணங்களை இப்பொழுது பார்க்கலாம்.
எளிமையான செயல்முறை:
பொதுவாக தங்கத்தின் 75% மதிப்பு கடனாக வழங்கப்படுகிறது. நீங்கள் வைத்திருக்கும் தங்கத்தின் தூய்மை, எடை மற்றும் சந்தை மதிப்பை பொறுத்து அது ஏற்படலாம். இந்த செயல்முறை நிறைவு செய்யப்பட்டதும், உங்களுடைய கடன் அங்கீகரிக்கப்பட்டு, உடனடியாக பணம் உங்கள் அக்கவுண்ட்டில் கிரெடிட் செய்யப்படும்.
விரைவான செயல்முறை:
கோல்டு லோன் கிரெடிட் ஆப்ஷன்களில் மிகவும் எளிமையானதாக கருதப்படுகிறது. ஒரு சில மணி நேரங்களிலேயே உங்களது தங்கத்தை அடமானம் வைத்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த கடன் வாங்குவதற்கு உங்களுடைய கிரிடிட் ஸ்கோர்கள் கருத்தில் கொள்ளப்படாது.
அதிக லோன் தொகை:
பர்சனல் லோன்கள் பொதுவாக தனிநபரின் திருப்பி செலுத்தும் திறனை பொறுத்து 1 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. ஆனால் கோல்டு லோனுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது. குறுகிய கால பேமெண்ட்களில் கோல்டு லோன் சிறப்பான தீர்வாக அமைகிறது.
மேலும் படிக்க:
Gold Rate Today | மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… நகை பிரியர்கள் ஷாக்!
திருப்பி செலுத்தும் கால அளவு:
கோல்டு லோன் குறுகிய கால தீர்வுகளாக அமைந்தாலும் இதற்கு 3 வருடங்கள் வரையிலான நீண்ட கால அளவு வழங்கப்படுகிறது. பர்சனல் லோன்களில் லோன் திருப்பி செலுத்தும் கால அளவு முக்கிய பங்கு வகிக்கிறது. கோல்டு லோனை நீங்கள் மாதாமாதமோ, மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறையோ வட்டி செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம்.
வட்டி விகிதம்:
கோல்டு லோன்கள் பாதுகாப்பான மற்றும் குறைவான வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. இதற்கான வட்டி விகிதம் தங்கத்தின் அளவு மற்றும் அதன் தூய்மையை பொறுத்து அமைகிறது. பொதுவாக வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களை காட்டிலும், வங்கிகளில் குறைந்த வட்டி விகிதங்களில் கோல்டு லோன் வழங்கப்படுகிறது.
.