Last Updated:
உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் பெரிய அணிகளை வெல்லத் தொடங்கும்போது எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் மற்ற அணிகளுக்கு கடும் போட்டி கொடுக்கும் அளவுக்கு ஆப்கன் அணி மாறியுள்ளதாக அந்த அணியின் கேப்டன ரஷித் கான் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் ரஷித் கான் அளித்துள்ள பேட்டியில் கூறயிருப்பதாவது-
எங்கள் அணியில் திறமையான ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். ஆனால் சரியான இடத்தில் பந்துவீசுவது மிகவும் முக்கியம். சென்னையில் IPL-ல் விளையாடிய அனுபவம் உதவும். இது ஒரு நல்ல போட்டியாக இருக்கும்.
உலகக் கோப்பையில் எதுவும் எளிதாக கிடைக்காது. எளிதான விஷயங்கள் அரிதாக கிடைப்பதுதான் சவால். உலகக்கோப்பையில் வலுவான எதிரணிகள் உள்ளன. முக்கியமாக, நாங்கள் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறோம்.
2024 உலகக் கோப்பைக்கு முன் குறிப்பிட்ட இலக்கு என்று எதுவும் இல்லை. எந்த பகுதிகளில் மேம்படுத்த வேண்டும், எதை விரும்புகிறோம் என்பதில் தெளிவு உள்ளது. 100 சதவீத முயற்சியை அளிப்போம்.
கூடுதல் அணிகள் இந்த முறை விளையாடுகின்றன. வெற்றி, தோல்வி முக்கியமல்ல. களத்தில் விளையாடுவதே முக்கியம். பல புதிய திறமையாளர்களை பார்க்க முடிகிறது. உலகக் கோப்பை நாளுக்கு நாள் பெரியதாகிறது. உலகிற்கு “நாமும் வெல்ல முடியும்” என்பதை காட்ட முடிகிறது.
உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் பெரிய அணிகளை வெல்லத் தொடங்கும்போது எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும், உலகக் கோப்பையில் பங்கேற்கும் என்று யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால், இப்போது நாங்களும் எங்கள் அணியை வலுவாக கட்டமைத்துள்ளோம். மற்ற அணிகளுக்கு கடும் போட்டி கொடுக்கும் அளவிற்கு ஆப்கானிஸ்தான் வளர்ந்துள்ளது.
10 ஆண்டுகளாக விளையாடி, முன்னணி விக்கெட் எடுப்பவராக நான் இருப்பது எனக்கு மிகவும் சிறப்பானது. ஆனால் நான் ஒருபோதும் விக்கெட்டுகளை எண்ணிக்கொண்டிருக்கவில்லை. என் அணிக்கு என்ன தேவையோ, அதையே சிறந்த முறையில் செய்ய ஒவ்வொரு முறையும் முயற்சிப்பேன்.
எங்களிடம் கடும் போட்டி உள்ளது. நான் இல்லாவிட்டாலும் நாளைய இளம் வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். எல்லோருக்கும் நல்ல பேக்கப் அணி உள்ளது. நீங்கள் செயல்படவில்லை என்றால், மற்றவர்கள் உங்கள் இடத்தை பிடித்துவிடுவார்கள்.
ஆப்கானிஸ்தானில் விளையாடுவது உலகக் கோப்பையைவிட பெரிய விஷயம். அங்கு மக்களின் வரவேற்பைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி. IPL, உலகக் கோப்பை போலவே அங்கேயும் எங்களுக்கு அன்பு கிடைக்கிறது. ஒருநாள் சர்வதேச அணிகள் ஆப்கானிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் விளையாடுவார்கள் என்று நம்புகிறேன்.


