• Login
Tuesday, May 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மறவோம் முள்ளிவாய்க்காலை! உலகத்தமிழர் வரலாற்று வளகத்தில் பெருந்திரள் அஞ்சலி

GenevaTimes by GenevaTimes
May 19, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
மறவோம் முள்ளிவாய்க்காலை! உலகத்தமிழர் வரலாற்று வளகத்தில் பெருந்திரள் அஞ்சலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில் கொத்துக்கொத்தாக தமிழ்மக்கள் இனப்படுகொலைசெய்யப்பட்ட நினைவு நாள் வழமை போல் இந்த ஆண்டும் உலகத்தமிழர் வரலாற்று வாளகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பெருமளவான பொது மக்கள் கலந்து கொள்ள உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது.



நிகழ்வின் ஆரம்பத்தில் பொது ஈகைச்சுடரினை அற்புதவிநாயகர் ஆலய குருக்கள் பிரம்மசிறி சதீஸ்வர சர்மா, அருட்தந்தை எல்மோவும், இளையோரான செல்வன் சஜன் மற்றும் முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் வீரச்சாவடைந்த வீரவேங்கை மது விழி அவர்களின் தாயார் கௌரி சிவராஜா, உலகத் தமிழர் வரலாற்றுவளாக அறங்காவலர் சபைத் தலைவர் சுகந்த குமார் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.


தொடர்ந்து பிரித்தானியா கொடியினை கொன்சவேற்றி கட்சியை சேர்ந்த சசி மயில் வாகனம் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசிய கொடியினை முன்னாள் போராளி செவ்வாணன் ஏற்றிவைத்தார்.

முள்ளிவாய்க்கால் அடையாளம்


நிகழ்வின் தொடர்ச்சியாக,அகவணக்கம் செலுத்த, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என அடையாளப்படுத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமை நினைவாக நிறுவப்பட்ட தூபியின் பிரதான சுடரினை இன அழிப்பினை அடையாளப்படுத்தும் பாடல் ஒலிக்க, வட போர்முனை தளபதிகளில் ஒருவரான அகிலேஸின் புதல்வன் தேனியன் ஏற்றிவைத்தார்.

மறவோம் முள்ளிவாய்க்காலை! உலகத்தமிழர் வரலாற்று வளகத்தில் பெருந்திரள் அஞ்சலி | Massive Tribute At The World Tamil History Complex

ஒழுங்குபடுத்தப்பட்ட சுடர்களை கண்களில் கண்ணீர் சொரிய ஏற்றிவைத்து வணக்கம் செலுத்தினர்.


மேலும் முள்ளிவாய்கால் இனப்படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்ததூபிக்கு தமிழீழ நாடு கடந்த அரசாங்க உறுப்பினர்கள் மலர் வளையம் வைத்து தமது வணக்கத்தினை செலுத்த, உலகத் தமிழர் வரலாற்றுவளாக இளையவன் அபிநிதன் மலர்வணக்கம் செய்து ஆரம்பித்து வைக்க நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர்களை ஏற்றி,மலர்வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து
இனப்படுகொலை நினைவுரைகளை கொன்சவெற்றி கட்சியின் தமிழ் பிரதிநிதி கஜன், உலகத் தமிழர்வரலாற்று வளாக முன்னாள் பணிப்பாளர் வசந்தன் ஆற்றினார்கள்.

ஆங்கில மொழியில் கார்த்திகா முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்து உலகத் தமிழர் வரலாற்றுவளாக இளையவள் அங்கையற் கண்ணி கவிதையினை வழங்கினார்.


கடந்த காலங்களில் இதே மாதத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் நினைவாகவும் குறிப்பாக முள்ளிவாய்க்கால் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் நினைவாகவும் மாவீரர் பொதுத் தூபிப் பகுதியில் நிலைப்படுத்தப்பட்டிருந்த மாவீரர்கள் திருவுருவப்படங்களுக்கு அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்கள்.


தொடர்ந்து உறுதியேற்புடன் தேசியக்கொடிகள் கையேற்கப்பட, நிகழ்வி்ன் இறுதியாக முள்ளிவாய்க்கால் கோரமான யுத்த காலத்தில் அங்கே ஏற்பட்டிருந்த உணவுத் தடை காரணமாக அன்றைய காலத்தில் எமது மக்களில் பசி தீர்த்த முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கிவைக்கப்பட்டதுடன்,
வளாகத்தில அமைந்துள்ள ஆலயங்களில் ஆத்ம சாந்தி பூசை வழிபாடுகளும் நடைபெற்றது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

ஜோகூர் அரசியல் மாநாட்டில் செய்தியாளர்கள் மீது ஆக்ரோஷமான நடந்த பாதுகாப்புப் பணியாளர்கள்- ஊடகக் கழகம் போலீஸ் புகார்! | Makkal Osai

Next Post

IPL Playoff : ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை ப்ளே ஆஃப் சென்ற டாப் 5 அணிகள்.. சிஎஸ்கேவுக்கு எந்த இடம் தெரியுமா?

Next Post
IPL Playoff : ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை ப்ளே ஆஃப் சென்ற டாப் 5 அணிகள்.. சிஎஸ்கேவுக்கு எந்த இடம் தெரியுமா?

IPL Playoff : ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை ப்ளே ஆஃப் சென்ற டாப் 5 அணிகள்.. சிஎஸ்கேவுக்கு எந்த இடம் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin