ஜூலை 18 ஆம் தேதி பிரான்சின் தெற்கு பகுதியில் உள்ள நைஸ் நகரில் தீ விபத்து ஏற்பட்டதில் மூன்று குழந்தைகள், ஒரு இளம்பெண் உட்பட 7 பேர் பலியாகியுள்ளனர்.
தீயில் பலியானவர்கள் மூன்று பெரியவர்கள், ஒரு இளம்பெண்,ஐந்து,ஏழு மற்றும் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்.
மேலும் அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
தீ விபத்து நடந்த தினத்தன்று இரவில் முக்காடு அணிந்து கொண்டு பெட்ரோல் ஊற்றி தீயைப் பற்ற வைத்துள்ளதாக நைஸ் நகரின் மேயர் கூறினார்.

