• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மருத்துவக் கடன் vs தனி நபர் கடன்: உங்கள் சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளுக்கு எது சரியானது…?

GenevaTimes by GenevaTimes
March 28, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
மருத்துவக் கடன் vs தனி நபர் கடன்: உங்கள் சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளுக்கு எது சரியானது…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மருத்துவக் கடன்கள்: மருத்துவச் செலவுகளுக்கானவை…

மருத்துவக் கடன்கள் சுகாதாரச் செலவுகளை ஈடுகட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறைவான வட்டி விகிதங்கள் மற்றும் வசதியான கட்டண விதிமுறைகள் போன்ற கூடுதல் சலுகைகளுடன் இவை வருகின்றன. அறுவை சிகிச்சை, மருத்துவ நடைமுறைகள், பல் மருத்துவம், கருவுறுதல் சிகிச்சை போன்றவற்றுக்கு இந்தக் கடனைப் பயன்படுத்தலாம்.

மருத்துவக் கடனில் இருக்கும் சிறந்த விஷயம் என்னவென்றால், அவை மருத்துவத் துறைக்கு மட்டுமே உரியவை. நோயாளிகள் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கு முன்பு குணமாவதில் கவனம் செலுத்துவதற்காக அவை தாமதமான பணம் செலுத்தும் திட்டங்களை வழங்குகின்றன. மருத்துவக் கடன்களைக் கையாளும் கடன் வழங்குநர்கள் அல்லது நிதி நிறுவனங்களும் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே, பணம் சரியான நேரத்தில் கிடைக்கும் வகையில் முன்கூட்டியே கடன்களை வழங்குகின்றன.

உதாரணமாக: கோடக் வங்கி குறைந்த ஆவணங்களுடன் குறைந்த வட்டி விகிதங்களில் ரூ.35 லட்சம் மருத்துவக் கடன்களை வழங்குகிறது. இதேபோல், ஐசிஐசிஐ வங்கி 10.85% வட்டியில் மருத்துவக் கடன்களை வழங்குகிறது. கடன் வாங்குபவர்களுக்கு திருப்பிச் செலுத்துவதில் தொந்தரவு இல்லாத அனுபவத்தை வழங்க ஐசிஐசிஐ வங்கி 12 முதல் 72 மாதங்கள் வரை மகத்தான நெகிழ்வுத் தன்மையை வழங்குகிறது.

தனிநபர் கடன்கள்: எளிதானது மற்றும் நெகிழ்வானது

தனிநபர் கடன்கள், அடிப்படையில் எளிதானவை. கடன் வாங்குபவர்கள் மருத்துவ நோக்கங்களுக்காக மட்டுமல்லாமல் வேறு எந்த நிதித் தேவைகளுக்கும் இந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த உத்தரவாதமும் இல்லாமல் தரப்படும் இந்தக் கடன்கள் ஹெடிஎஃப்சி மற்றும் இண்டஸ்இண்ட் போன்ற வங்கிகளில் ரூ.30,000 முதல் ரூ.5 லட்சம் அல்லது அதற்கும் அதிகமான தொகை எளிதாகக் கிடைக்கின்றன.

தனிநபர் கடன்கள் சுமார் 10% வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளன. மேலும், அவை கிரெடிட் கார்டுகளுடன் ஒப்பிடும்போது மருத்துவச் செலவுகளுக்கு குறைந்த செலவில் நிதியளிக்கும் ஆதாரத்தை வழங்குகின்றன. தாமதமாக திருப்பிச் செலுத்தும் வசதி அல்லது தனிப்பயனாக்கப்பட்ட கட்டண அட்டவணைகள் போன்ற மருத்துவக் கடன்களின் நன்மைகள் தனிநபர் கடன்களுக்கு இருக்காது.

இதையும் படிக்க: மது அருந்துவதை மறைத்தால் உங்கள் காப்பீட்டு கோரிக்கை நிராகரிக்கப்படலாம்; உச்சநீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன…?

மேலும், இந்த வங்கிகள் உங்களிடமிருந்து வசூலிக்கும் வட்டி விகிதம், உங்கள் கடன் விவரம், கடன் மதிப்பெண், திருப்பிச் செலுத்தும் திறன், கடந்தகால தனிநபர் கடன்களைத் திருப்பிச் செலுத்திய வரலாறு, மாதச் சம்பளம், கிரெடிட் கார்டு பயன்பாட்டு வரலாறு போன்ற பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.

தனிநபர் கடன்களுக்கும், மருத்துவக் கடன்களுக்கும் உள்ள வேறுபாடுகள்

மருத்துவக் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் இரண்டையும் மருத்துவச் செலவுகளுக்குப் பயன்படுத்தலாம் என்றாலும், இரண்டும் வெவ்வேறு வகைகளைச் சேர்ந்தவை. மருத்துவக் கடன்கள் குறிப்பாக மருத்துவத் தேவைகளுக்காக மட்டுமே உள்ளன. மேலும், அவை எளிதான திருப்பிச் செலுத்தும் கட்டமைப்புகள் மற்றும் அவ்வப்போது குறைந்த வட்டியுடன் வருகின்றன. மருத்துவக் கடன்கள் அறுவை சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சிகிச்சை போன்ற பல்வேறு மருத்துவக் கட்டணங்களை ஈடுகட்டும் நோக்கம் கொண்டவை.

தனிநபர் கடன்கள் குறைவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இதில் எதற்கும் கடன் வழங்கப்படுகிறது. போக்குவரத்து அல்லது குழந்தை பராமரிப்பு போன்ற நோய் காரணமாக ஏற்படும் தற்செயலான செலவுகளைச் செலுத்துவதற்கு தனிநபர் கடன்கள் சிறந்தவை. தனிநபர் கடன்கள் சில மருத்துவக் கடன்களுடன் ஒப்பிடும்போது கடுமையான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், தேவைகள் மற்றும் அதிக வட்டி விகிதங்களைக் கொண்டிருக்கலாம்.

இதையும் படிக்க: ஏப்ரல் 1 முதல் எஸ்பிஐ, IDFC ஃபர்ஸ்ட் பேங்க் கிரெடிட் கார்டுகளில் முக்கிய மாற்றங்கள்…!

உங்கள் சொந்தத் தேவைகளைப் பொறுத்து மருத்துவக் கடனுக்கும், தனிநபர் கடனுக்கும் இடையில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உங்களுடைய முடிவு. உங்கள் செலவுகள் அனைத்தும் மருத்துவ இயல்புடையதாக இருந்தால், குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் தாமதமான மற்றும் நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் விதிமுறைகளை நீங்கள் விரும்பினால், மருத்துவக் கடனைத் தேர்ந்தெடுக்கலாம். கடன் தொகையைப் பயன்படுத்துவதில் நெகிழ்வுத் தன்மையை நீங்கள் விரும்பினால் அல்லது மருத்துவச் செலவுகளைத் தவிர வேறு செலவுகள் இருந்தால், தனிநபர் கடனைத் தேர்ந்தெடுக்கலாம்.

First Published :

March 28, 2025 5:55 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

மருத்துவக் கடன் vs தனி நபர் கடன்: உங்கள் சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளுக்கு எது சரியானது…?

Read More

Previous Post

‘நானும் ரஜத் பட்டிதாரும் நண்பர்கள்’ – மனம் திறந்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் | we are friends says captain of csk ruturaj on rcb skipper rajat patidar ipl 2025

Next Post

மியான்மர் பூகம்பம்: தாய்லாந்தில் சரிந்த கட்டிடங்கள் – பாதிப்புகள் எத்தகையது? | Two powerful earthquakes hit Myanmar, trap dozens under rubble in Thailand

Next Post
மியான்மர் பூகம்பம்: தாய்லாந்தில் சரிந்த கட்டிடங்கள் – பாதிப்புகள் எத்தகையது? | Two powerful earthquakes hit Myanmar, trap dozens under rubble in Thailand

மியான்மர் பூகம்பம்: தாய்லாந்தில் சரிந்த கட்டிடங்கள் - பாதிப்புகள் எத்தகையது? | Two powerful earthquakes hit Myanmar, trap dozens under rubble in Thailand

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin