யாழ்ப்பாணம், மருதங்கேணி பாலத்தின் அருகில் வீதி தாழ் இறங்கியமையால், பாலம் ஆபத்தான நிலையில் காணப்பட்டமையை அடுத்து உடனடியாக அதன் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வீதி தாழிறங்கி காணப்பட்டமை தொடர்பில் தகவல் அறிந்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மருதங்கேணி பகுதிக்கு நேரில் சென்று, திருத்த வேலைகளை நேரில் பார்வையிட்டதுடன், அதிகாரிகளிடம் அது தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
புதுக்கட்டு சந்தியில் இருந்து தாளையடி செல்லும் வீதியில், மருதங்கேணி பாலம் அமைந்துள்ள வீதியின் பகுதி, அதிக நீரோட்டம் காரணமாக தாழிறங்கி காணப்பட்டது.
உடனடியாக அப்பகுதியில் மண் மூடைகள் போடப்பட்டு, சீர் செய்யப்பட்டமையால் மேலும் வீதி சேதமடையாமல் தடுக்கப்பட்டது.
யாழ். விசேட நிருபர்
The post மருதங்கேணி பாலத்தை நேரில் சென்று பார்த்த கடற்றொழில் அமைச்சர் appeared first on Thinakaran.


