• Login
Sunday, October 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்… குஜராத் சம்பவம் குறித்து 2 வாரத்தில் அறிக்கை கேட்ட ஆணையம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 18, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்… குஜராத் சம்பவம் குறித்து 2 வாரத்தில் அறிக்கை கேட்ட ஆணையம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 18, 2026 3:32 PM IST

இச்சம்பவம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம்
தேசிய மனித உரிமைகள் ஆணையம்

குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான ஊடகச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில், வேறொரு ஆணுடன் வாழ்ந்து வந்த திருமணமான பெண் ஒருவரை, அவரது கணவரும் குடும்பத்தினரும் மரத்தில் கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் மனித உரிமை மீறலின் தீவிரத்தைக் காட்டுவதாகத் தெரிவித்துள்ள ஆணையம், பாதிக்கப்பட்ட பெண்ணின் தற்போதைய உடல்நிலை மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட இழப்பீடு குறித்த விவரங்களுடன் இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டுள்ளது.

இதேபோன்று, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில், வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். விபத்து நடந்தபோது பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் இல்லாததால், காயமடைந்த சிறுவர்கள் தாங்களாகவே வீட்டிற்கு நடந்து சென்று, பின்னரே பெற்றோரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, காயமடைந்த மாணவர்களின் உடல்நிலை குறித்த விவரங்களுடன் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உதய்பூர் மாவட்ட ஆட்சியருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மற்றொரு சம்பவமாக, மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள அம்பாட் தொழிற்பேட்டை அருகிலுள்ள தத்தாநகர் பகுதியில், தொழிற்சாலை கழிவுநீர் கசிவால் ஆழ்துளைக் கிணற்று நீர் கடுமையாக மாசடைந்துள்ளது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதி மக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலாளர் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை இரண்டு வார காலத்திற்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மூன்று சம்பவங்களும் மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டிருப்பதை உணர்த்துவதாகக் குறிப்பிட்டுள்ள ஆணையம், உரிய விசாரணை அறிக்கைகளை இரு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கத் தவறினால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

Read More

Previous Post

கலேவெல மற்றும் திருகோணமலையில் இடம்பெற்ற பஸ் விபத்துகளில் இருவர் உயிரிழப்பு – Sri Lanka Tamil News

Next Post

வைபவ் சூர்யவன்ஷிக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை? கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பதில்!

Next Post
வைபவ் சூர்யவன்ஷிக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை? கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பதில்!

வைபவ் சூர்யவன்ஷிக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை? கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பதில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin