அமெரிக்காவின் Tennessee மாநிலத்தில் மரண தண்டனை கைதி Christa Pike-க்கு மரண ஊசி மூலம் தண்டனையை நிறைவேற்ற முயன்றபோது நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு முறை மரண ஊசி செலுத்தப்பட்டும் அவர் உயிரிழக்கவில்லை. தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
யார் இந்த Christa Pike?
50 வயதான Christa Pike, 1995-ம் ஆண்டு Tennessee-யில் உள்ள Job Corps பயிற்சி மையத்தில் தன்னுடன் படித்த 19 வயது Colleen Slemmer என்பவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர்.
Pike-க்கு அப்போது 18 வயது. தனது காதலன் Tadaryl Shipp உடன் சேர்ந்து Slemmer-ஐ தாக்கி கொலை செய்ததாக வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டது. 1996-ம் ஆண்டு Pike-க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் Pike-ன் சிறுவயது பின்னணியும் முக்கியமாகப் பேசப்பட்டது. சிறுவயது முதலே பாலியல் வன்கொடுமை, உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான துன்புறுத்தல், புறக்கணிப்பு ஆகியவற்றை அவர் சந்தித்ததாக அவரது சட்டக் குழு நீதிமன்ற ஆவணங்களில் தெரிவித்தது. இந்த பின்னணி, 18 வயதில் அவர் செய்த குற்றத்துக்கான தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக முன்வைக்கப்பட்டது
மரண ஊசி செலுத்தியபோது என்ன நடந்தது?
1996-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், பல ஆண்டுகள் நடந்த மேல்முறையீடுகள் மற்றும் சட்டப் போராட்டங்களால் 2026 வரை தண்டனை நிறைவேற்றப்படவில்லை
இறுதியாக
2026 செப்டம்பர் 30 அன்று Pike-ன் மரண தண்டனை நிறைவேற்ற பட்டு injection மூலம் நிறைவேற்ற Tennessee அதிகாரிகள் முயன்றனர்.
இரண்டு doses செலுத்தப்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மருந்து செலுத்தப்பட்ட பிறகும் Pike உயிருடன் இருந்தார்.
Execution-ஐ நேரில் பார்த்தவர்கள், அவர் சுவாசித்ததாகவும் snoring போன்ற சத்தம் கேட்டதாகவும் தெரிவித்தனர். பின்னர் அவசர மருத்துவ உதவி அழைக்கப்பட்டு, Pike ambulance மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த நீதிமன்ற தரவுகளின் படி, IV line அமைப்பதில் கடுமையான பிரச்னைகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. குறைந்தது ஏழு ஊசிகள் பயன்படுத்தப்பட்டதாகவும், ஒரு ஊசி வளைந்த நிலையில் வெளியே எடுக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு கைகளும் வீங்கி, தீக்காயம் போன்று, கொப்புளங்களுடன் நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை செயல்படுத்துவதில் உண்மையில் என்ன தவறு நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

