சிஎஸ்கே அணியின் தோல்வியை கொண்டாடிய ஆர்சிபி வீரர்கள் தற்போது அடங்கிப் போய் உள்ளனர். விளையாட்டின் போது
நட்சத்திர வீரர் விராட் கோலி எதிரணியரிடம் அக்ரோசமாக நடந்து கொள்வது உள்ளிட்ட வீடியோக்கள் தொடர்ந்து வெளிவந்து பலரின் விமர்சனத்தையும் பெற்றது. அதிலும் முக்கியமாக சிஎஸ்கே அணியுடன் விளையாடி வெற்றி பெற்ற போது அவர்கள் நடந்து கொண்டது சிஎஸ்கே ரசிகர்களுக்கு வெறுப்பை உண்டாக்கியது.
இந்நிலையில் ஆர் சி பி யின் தோல்வியை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால் கோலி கடும் கோபத்தில் உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் கோலியை கலாய்த்து சமூக வலைத்தளங்களில் மீமிஸ்கள் மற்றும் ட்ரோல்
செய்த வண்ணம் உள்ளனர்.கோலி: தம்பி பாய்ண்ட்ஸ் டேபில தலைகீழா வச்சு ஒருமுற பார்ப்போமா…,சிஎஸ்கே ரசிகர்கள்: அடேங்கப்பா… மின்னலுக்கு வந்த இன்னல்.. போன்ற கமெண்ட்ஸ்களை அள்ளித் தெறிக்க விட்டிருக்கின்றனர். சி எஸ் கே Vsஆர் சி பி அணியின் வெற்றி கொண்டாட்டத்தை விட தற்போது ஆர் ஆர் Vs ஆர் சி பி தோல்வி கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

