• Login
Sunday, October 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மரணத்தை கண்டு பயமில்லை.. விமானத்தை விபத்திற்குள்ளாக்குவதே திட்டம்! ஃப்ளைதுபாய் ஹம்மாமி வாக்குமூலம் | Flydubai Attack: Co-Pilot Hamam Al-Hammami Admits He Wanted to Crash the Plane with passengers

GenevaTimes by GenevaTimes
October 4, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மரணத்தை கண்டு பயமில்லை.. விமானத்தை விபத்திற்குள்ளாக்குவதே திட்டம்! ஃப்ளைதுபாய் ஹம்மாமி வாக்குமூலம் | Flydubai Attack: Co-Pilot Hamam Al-Hammami Admits He Wanted to Crash the Plane with passengers
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Vigneshkumar

Time
Published: Sunday, October 4, 2026, 17:49 [IST]

டெல்லி: ஃப்ளைதுபாய் சம்பவம் கடந்த ஒரு வாரமாக பெரும் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், விமானத்தை வேண்டுமென்றே கீழே மோத செய்ய நினைத்ததாகவும், மரணத்துக்கு தான் பயப்படவில்லை என்றும் அதன் துணை விமானி ஹம்மாம் அல்-ஹம்மாமி விசாரணையில் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃப்ளைதுபாய் சம்பவத்திற்கு காரணமாக இருந்த துணை விமானி ஹம்மாம் அல்-ஹம்மாமி இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவரிடம் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

Flydubai Attack flight

சவுதி அதிகாரி

இதற்கிடையே ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ விசாரணை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. ஹம்மாமியிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்த தகவல்களை சவுதி அதிகாரி ஒருவர் பகிர்ந்துள்ளார். அப்போது விமானத்தை திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்பதை ஹம்மாமி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

விசாரணையின் ஒரு கட்டமாக துணை விமானி ஹம்மாமின் சமூக வலைத்தள போஸ்ட்களும் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 2022ம் ஆண்டு ஜூன் மாதம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், விமான பயிற்சி மற்றும் விமான போக்குவரத்து மீது தனக்கு இருந்த ஆர்வத்தை ஹம்மாமி காட்டியிருக்கிறார். முதல் முறையாக தனியாக விமானத்தை இயக்கியது, பயணிகளுடன் விமானத்தை முதல் முறையாக தரையிறக்கியது போன்ற அனுபவங்களை மறக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பைலட் பணி

ஆனால் பின்னர் அவரது நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஹம்மாமியின் பின்னணி குறித்து விசாரித்த அதிகாரிகளை மேற்கோள் காட்டிய வால் ஸ்ட்ரீட் ஜர்னல், அவர் தீவிரவாத கருத்துகள் தொடர்பான இணையதளங்களைப் பார்வையிட்டது கண்டறியப்பட்டதால், ஓமன் ஏர் நிறுவனம் அவரை விமானத்தை இயக்கும் பணியில் இருந்து நீக்கியதாக தெரிவித்துள்ளது.

அதன் பிறகு தீவிரவாத சிந்தனைகளில் இருந்து விடுபட தனியாக ஒரு பயிற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளார். பிறகு அலுவலக பணிக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு நடுவே அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வேறு ஒரு நிறுவனத்தில் துணை பைலட்டாக சேர்ந்துள்ளார்.

ஆய்வு

ஹம்மாமியின் நீக்கப்பட்ட ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த 3,000க்கும் மேற்பட்ட போஸ்ட்களை இப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அவற்றில் பெண்கள் வேலை செய்யக்கூடாது என்பது போன்ற கருத்துகளும் மத நம்பிக்கைகள் குறித்த பதிவுகளும் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த நாளில் அவரது நீக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்ட சில பதிவுகளும் விசாரணையில் கவனம் பெற்றுள்ளன.

துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி சென்ற ஃப்ளைதுபாய் FZ1073 விமானம் 170க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. சவுதி அரேபிய வான்வெளியில் சென்றபோது விமானம் திடீரென திசைமாறி இரண்டு முறை வேகமாக கீழிறங்கியது. ஒரு கட்டத்தில் 30 விநாடிகளில் சுமார் 16,000 அடிக்கும் மேல் சரிந்துள்ளது. அப்போது காக்பிட் உள்ளே துணை விமானி ஹம்மாமி, விமான அறையில் வைக்கப்பட்டிருந்த கோடரியை பயன்படுத்தி கேப்டன் சுமித் மச்ச்சாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

கேப்டன் ஸ்மித்

காயமடைந்த கேப்டன் ஸ்மித் உயிருக்கு போராடி போதும், காக்பிட் கதவை திறந்துள்ளார். அப்போது பயணிகள் உள்ளே சென்று ஹம்மாமியை கட்டுப்படுத்தினர். சில பயணிகள் அவரை கட்டிப்போட்டனர். விமானத்தில் பயணம் செய்த இரண்டு ஓய்வில் விமானிகள் பின்னர் விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தபூக்கில் தரையிறக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு விஷயங்கள்

ஹம்மாமி குறித்த விசாரணையில் இப்போது இரண்டு விஷயங்கள் கவனம் பெற்றுள்ளன. அவர் சில ஆண்டுகள் சிரியாவில் இருந்த நிலையில், அப்போது அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது முதல் விஷயம். அடுத்து விமானி பணியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவருக்கு ஃப்ளைதுபாயில் எப்படி விமானி பணிக்கான வாய்ப்பு கிடைத்தது என்பது இரண்டாவது விஷயம். இந்த இரண்டு குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

ஐக்கிய அமீரகம் இந்த சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டுள்ளது. எனினும், தாக்குதலுக்கான முழுமையான நோக்கம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

English summary

Flydubai co-pilot Hamam Al-Hammami has reportedly told investigators that he intended to deliberately crash(துபாய் விமான தாக்குதல் நடந்தது என்ன): Flydubai Attack latest news in tamil.

Read More

Previous Post

அமெரிக்காவுக்கு எதிரான சாத்தியமான போருக்கு தயாராகும் ஈரானிய பெண்கள்

Next Post

பள்ளி கத்திகுத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தொடர்ந்துள்ள உரிமையியல் வழக்கை அதன் போக்கில் செல்ல அரசு அனுமதி – Malaysiakini

Next Post

பள்ளி கத்திகுத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தொடர்ந்துள்ள உரிமையியல் வழக்கை அதன் போக்கில் செல்ல அரசு அனுமதி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin