தமிழ் திரையுலகில் பேண்டஸி மற்றும் நகைச்சுவை இணைந்து வெற்றிகரமாக உருவான சில படங்களில், ஒன்று மரகத நாணயம். நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில், இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத்தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்தையும் ஏகேஆர் சரவணன்தான் இயக்குகிறார். இதில் ஆதி, நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர், முனிஷ்காந்த், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
பேஷன் ஸ்டூடியோஸ், அக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து படத்தை தயாரித்துள்ளது. அண்மையில் மரகத நாணயம் 2′ படத்தின் பூஜை நடைபெற்றது.பூஜையில் நடிகர் கார்த்தி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இந்நிலையில், ‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது




