44
வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா திங்கட்கிழமை (13) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக திருவிழா இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நேற்று (19) இரவு 7ஆம் நாள் விசேட திருக்கல்யாண உற்சவம் இடம்பெற்றது.
தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் உள் வீதி,வெளி வீதி உலா வந்தனர்.
நாளை (21) தேர் திருவிழா மற்றும் மறுநாள் (22) தீர்த்த உற்சவம் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் குறூப் நிருபர் – எஸ்.ஆர்.லெம்பேட்


