• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மன்னாரில் போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

GenevaTimes by GenevaTimes
November 13, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மன்னாரில் போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 

ரொசேரியன் லெம்பேட்

20 கிராம் மெத்தம் பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை தொடர்பான வழக்கில், பிரதிவாதியை குற்றவாளியாக இனங்கண்ட மன்னார்  மேல் நீதிமன்றம் ​அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்தக் குற்றம்,  2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு,   மன்னார்   மேல் நீதிமன்ற நீதிபதி   எம். மிஹால்  முன்னிலையில் புதன்கிழமை (12) அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில், வழக்குத்தொடருநர் தரப்பிற்காக அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன்   ஆஜராகி, வழக்கினை நெறிப்படுத்தினார். பிரதிவாதி  தரப்பிற்காக ஜனாதிபதி சட்டத்தரணி   யு. ஆர். டி சில்வா   ஆஜராகியிருந்தார்.

வழக்கு விசாரணையின் முடிவில், வழக்குத் தொடுநர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், பிரதிவாதி மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப் பட்டதாக மன்றம் ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து, பிரதிவாதியை குற்றவாளியாக அறிவித்த   நீதிபதி, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

சமீப காலமாக, மன்னார் பிரதேசத்தில் இடம் பெறும் பாரிய போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும்   கடூழிய சிறை தண்டனைகள் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.  



Read More

Previous Post

சபா மாநிலத் தேர்தல்; தவறான தகவல்களை தடுக்கும் நோக்கில் TikTok உடன் இணைகிறது தேர்தல் ஆணையம் | Makkal Osai

Next Post

Bihar Election Result : ஒருமுறை கூட போட்டியிடவில்லை.. 20 ஆண்டுகள் பிகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் கோலோச்சியது எப்படி? | இந்தியா

Next Post
Bihar Election Result : ஒருமுறை கூட போட்டியிடவில்லை.. 20 ஆண்டுகள் பிகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் கோலோச்சியது எப்படி? | இந்தியா

Bihar Election Result : ஒருமுறை கூட போட்டியிடவில்லை.. 20 ஆண்டுகள் பிகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் கோலோச்சியது எப்படி? | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin