Last Updated:
பாதுகாப்பு படை வீரர், வரதட்சணை கொடுமை வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.
வரதட்சணை கொடுமை செய்து மனைவியை கொன்ற வழக்கில், பாதுகாப்பு படை வீரர் ஒருவர், ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றதால் சரண் அடைவதில் விலக்கு கோரி, உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது.
பஞ்சாபை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் ஒருவர், வரதட்சணை கொடுமை செய்து மனைவியை கொன்றதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம், குற்றச்சாட்டு நிரூபணமானதாக கூறி, பாதுகாப்பு படை வீரருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இதனை எதிர்த்து, பாதுகாப்பு படை வீரர் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் மற்றும் வினோத் சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதுகாப்பு படை வீரர் ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றதால், அவர் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், வீட்டில் அடாவடித்தனம் செய்து விட்டு, ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றதாக கூறி தப்பிக்க முடியாது என்று கூறினர். மேலும், ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றதால், அவர் உடல் அளவில் எவ்வளவு வலிமையானவர் என்பதை புரிந்துக் கொள்ள முடிவதாக கூறிய நீதிபதிகள், தனிநபராக அவர் மனைவியை கொலை செய்திருக்கக்கூடும் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில், மனுதாரர் தரப்பினர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, பாதுகாப்பு வீரர் 2 வாரங்களில் சரண் அடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
June 25, 2025 3:45 PM IST
மனைவி கொலை.. ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்பு.. உச்சநீதிமன்றத்தில் பாதுகாப்பு படை வீரர் முன்வைத்த வினோத கோரிக்கை!


