மத்திய பிரதேசத்தில் மனைவி கண் முன் ‘அங்கிள்’ என அழைத்ததால் அப்செட் ஆன கணவர் புடவை கடைக்காரரை புரட்டி எடுத்த திடுக்கிடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அங்கிள் என்ற வார்த்தை இளைஞரின் ஆத்திரத்தை தூண்டியது எப்படி?
மனைவி முன் அங்கிள் எனக் கூப்பிட்டதால் ஆத்திரமடைந்த கணவர் துணிக்கடைக்காரரை துவைத்தெடுத்துள்ளார். மனைவி முன்னிலையில் இமேஜை டேமேஜ் செய்தது தான் உண்மையில் தகராறுக்கு காரணமா?
மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் ஜட்கேடி என்ற பகுதியில் ஜவுளிக் கடைக்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு ரோகித் என்பவர் தனது மனைவியுடன் கடந்த சனிக்கிழமை துணி வாங்க சென்றுள்ளார். அப்போது கடையில் வேலை பார்த்து வந்த விஷால் சாஸ்த்திரி என்ற இளைஞர் அவர்களுக்கு புடவைகளை எடுத்த காண்பித்துக் கொண்டிருந்தார். எந்த ரேட்டில் புடவை வேண்டும் என்று கேட்டதற்கு ஆயிரம் ருபாய் ரேஞ்சில் காட்டுங்கள் என்று ரோகித் கூறியுள்ளார்.
அதற்கு விஷால், “அங்கிள் அதற்கு மேல் உள்ள விலையிலும் புடவைகளை காட்டுகிறேன், எது பிடித்திருக்கிறதோ வாங்கிக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார். மனைவி முன்னிலையில் தன்னை அங்கிள் எனக் கூப்பிட்டதால் ஆத்திரம் தலைக்கேறிய ரோகித் விஷாலிடம் வாக்குவாதம் செய்துள்ளார். எப்படி என்னை பார்த்து அங்கிள் எனக் கூறலாம் எனக் கேட்டதற்கு, ஆளையும் தொப்பையையும் பார்த்தால் அப்படித் தான் தெரிகிறது அங்கிள் என மேலும் எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றியிருக்கிறார் விஷால்.
இதையும் படிங்க: “மலையாள இந்து அதிகாரிகள்” பரபரப்பை ஏற்படுத்திய வாட்ஸ்அப் குழு.. நடந்தது என்ன?
கண்கள் சிவந்து போன ரோகித் உடனே தனது மனைவியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். சிறிதுநேரத்தில் தனது கூட்டாளிகளைக் அழைத்துக் கொண்டு அதே கடைக்கு வந்த ரோகித். அங்கு தன்னை “அங்கிள் அங்கிள்” என அழைத்து தனது மனைவி முன்னிலையில், இமேஜை டேமேஜ் செய்த விஷாலை வெளியே இழுத்து வந்து புரட்டியெடுத்தார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)